*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, February 08, 2013

புதுப்புரட்சி...

உன‌க்கும் என‌க்குமான‌
காதல் பேச்சுக்களை 
இடைமுறித்து 
சடுகுடு ஆட 
இரண்டு விருந்தாளிகள்.

விளையாட்டு  தோற்றுவிட
வெளியேறுகிறது 
சாபங்கள் சில.

மைதானம் மிதித்து
புற்கள் கருகச் 
சாபமிட்ட அவர்கள்
தேநீர்க் கோப்பைகளை விட்டுத் 
தொலைந்திருந்தனர்.

நான்கு இருக்கைக‌ள்
இப்போ வெறுமையாய்!!! 

ஹேமா(சுவிஸ்)

9 comments:

K said...

நான்கு இருக்கைக‌ள்
இப்போ வெறுமையாய்!!! ///

ம்ம்ம்.... இப்படித்தான்! இதுவும் இல்லை! அதுவும் இல்லை! கடைசியில் நான்குமே வெறுமையாய்!

அசத்தல் கவிதை ஹேமா!

இளமதி said...

ஆட்டமோ சடுகுடு
ஆடியது காதலர்கள்
இது வெறும் ஊடல்தான்
கேடு பெரிதாய் இல்லை
கூடும் ஒன்றாய் விரைவாய்...:)

இராஜராஜேஸ்வரி said...

விளையாட்டு  தோற்றுவிட
வெளியேறுகிறது 
சாபங்கள் சில.

புதுப்புரட்சியோ ..!

ஸ்ரீராம். said...

ஊடல் தீரட்டும் சீக்கிரம்!

Unknown said...

நன்று... தோழி

பிலஹரி:) ) அதிரா said...

ஸ்ஸ்ஸ் என்ன அநியாயம்... நல்லாயிருக்கு ஹேமா.

பால கணேஷ் said...

ஹா...ஹா... அழகாச் சொல்லியிருக்காங்க ஆதிரா. மிக ரசித்தேன் ஃப்ரெண்ட்1

சசிகலா said...

எல்லாமே வெறுமையாய்..

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை ஹேமா.

Post a Comment