ஒட்டியிருக்கும்
ஒற்றைப் பருக்கைகள்
கழுவப்படாமல் காத்திருப்போடு.
காக்கைகளும்
கழிவகற்றும் கைகளும்
தம் அவசரத்துள்.
காட்சி மாறும் திசையில்
பசி மயக்கத்து
தெருவோரச் சிறுமியை
அள்ளி எடுத்தபடி சூரியக்கதிர்.
விடாப்பிடியான
நச்சமில வார்த்தையை
கொட்டியும் வீசியுமாய்
அந்தக் கைகள்.
கொல்லைப்புற
ஓட்டை வழியே வரும் எலி
மெல்ல நுழைகிறது.
நலிந்தோரை
கொத்தியும் கல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைகள்!!!
ஹேமா(சுவிஸ்) நன்றி - உயிரோசை.
Tweet | ||||