*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, December 05, 2012

மழை நனைக்கும் ஒரு சொல்...

என்...
இரவுகளைக் காவலிருக்கிறது
உன் பூனை
முடியும்
இதோடு முடியுமென
முடியாமல் நீளும்
மாடிப்படிகளில்.

நீ...
சொன்னதால்
கதவுகள் திறந்து கிடக்க
பூனையின் அலறல்
காது சிதம்புகிறது.

உன்...
ஒற்றைச் சொல்
அகப்படுமென
உலகத்து ஓசைகளைத்
தன்னோடு இசைக்கிறதென்
வளையல்கள்.

மண்ணும்
காகிதக் கப்பல் சிறுமியும்
பிசிநாறி மழைக்காக
காத்திருக்க
அதே மழையை சபிக்கிறாள்
தெருக் கிழவி.

சொல்...
உன் பூனை என்பதால்
நனையாமல் காவலிருக்கிறேன்
இன்னும்
விட்டு வைக்கிறேன்
ஒரு மழை
காப்பாற்றட்டும் இரு உயிரை!!!

ஹேமா(சுவிஸ்)

26 comments:

ஆத்மா said...

ஆரம்பிச்சிட்டீங்களா மறுபடியும் புரியாத வார்த்தைகளை.. :)))

பிசிநாறி
////////////

புரியவேயில்லை..
ஆனாலும் ரசித்தேன் ...
வாக்கியங்களின் கோர்ப்பு அழகு

வெற்றிவேல் said...

மண்ணும்
காகிதக் கப்பல் சிறுமியும்
பிசிநாறி மழைக்காக
காத்திருக்க
அதே மழையை சபிக்கிறாள்
தெருக் கிழவி.

...........எதார்த்தமான வரிகள்...

இன்னும் ஒரு மழை மட்டும் அல்ல. நித்தமும் இனி மழைதான்... அழகு.

சிகரம் பாரதி said...

அருமை ஹேமா. காதல் கவிதை எழுதவே பிறந்திருப்பீங்களோ?
என் தளத்தில்:
நீ - நான் - காதல்
இரண்டு குட்டிக் காதல் கவிதைகள்

http://newsigaram.blogspot.com/2012/12/nee-naan-kaadhal-03.html#.UL9fqGddlkg

ராமலக்ஷ்மி said...

/மண்ணும்
காகிதக் கப்பல் சிறுமியும்
பிசிநாறி மழைக்காக
காத்திருக்க
அதே மழையை சபிக்கிறாள்
தெருக் கிழவி./

அருமை ஹேமா!

ஸ்ரீராம். said...

சிதம்புகிறது? தலைப்பு மனதை நனைக்கிறது.

Kanchana Radhakrishnan said...

அருமை

Seeni said...

ethaiyo unarthukirathu.....

அப்பாதுரை said...

உலகத்து ஓசைகளை இசைக்கும் வளையல்கள்.. காத்திருத்தலின் நயம் வித்தியாசமாக வெளிப்படுகிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆழமாக சிந்திக்க வைத்தது கவிதை. நன்று.

தமிழ் காமெடி உலகம் said...

மிகவும் அருமையான வரிகள்....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!

பிலஹரி:) ) அதிரா said...

எனக்கும் புரியவேஉஇல்லைக் ஹேமா.. ஆனா பூனை என்பதால் ரசித்துப் படிக்கிறேன்:))

அருணா செல்வம் said...

என் இனிய தோழி ஹேமா யோசித்துக் கொண்டே இருக்கிறேன்......

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

மழைகொடுக்கும் நற்குளிரை உன்றன் சொற்கள்
மனத்துக்குள் கொடுத்தனவே! மின்னும் பொன்னின்
இழைகொடுக்கும் வண்ணத்தில் இயற்றும் பாக்கள்
இதயத்துள் பதியுமெனில் புலமை ஓங்கும்!
பிழைகொடுக்கும் துயரின்றிக் கற்றோர் நெஞ்சுள்
பிணிகொடுக்கும் வலியின்றிக் கவி பிறந்தால்
தழைகொடுக்கும் சத்துணவாய்த் தமிழ் செழிக்கும்!
தண்கவிதை தரும்ஏமா வளா்க நன்றே!

விச்சு said...

நான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ”பிசிநாறி” வார்த்தை நல்லாயிருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

மழை நனைக்கும் ஒரு சொல் தேடவைக்கிறது மழையை!!

அன்புடன் அருணா said...

மழை நனைக்கும் ஒரு சொல் என்னையும் நனைத்தது!!

மாதேவி said...

கவிதை மழை சிலிர்க்கின்றது ஹேமா.

மழைக்காகக் காத்திருப்பதும் சபிப்பதும் தொடர்கதைதான்...

இளமதி said...

தோழி...கொஞ்சு தமிழ் அழகில் அற்புதமாக நடனமாடிய கவிதை வரிகள்.

சொல்லோடு மனதையும் நனைத்துவிட்டது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்...

சின்னப்பயல் said...

உன் பூனை என்பதால்
நனையாமல் காவலிருக்கிறேன்

மாலதி said...

உள்ளம் கவரும் நல்ல கவிதை பாராட்டுகள்

kovetha said...

இந்தக் கவிதை யாருக்காக எழுதப்பட்டதோ அவருக்காக நானும் காவலிருக்கிறேன்...வளையல்களோடு அல்ல..விலங்குகளோடு

நன்றி
ஹேமா

jgmlanka said...

வரிகளை சொற்பஞ்சமின்றித் தொடுத்திருக்கும் அழகோ தனி.. இரசித்தேன்..
///முடியும்
இதோடு முடியுமென
முடியாமல் நீளும்
மாடிப்படிகளில்...//// ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் மனதைத் தொட்டுச் செல்லும் வரிகள்...
பாராட்டுகிறேன் தோழி

கோமதி அரசு said...

மழை ஒரு சொலருக்கு வரம், சிலருக்கு சாபம்.
குழந்தைக்கு மழை கொண்டாட்டம், தெருவில் இருக்கும் முதியவளுக்கு சபிக்கத்தான் தோன்றும்.
மழைக் கவிதை அருமை.

கோமதி அரசு said...

ஒரு சிலருக்கு வரம் என்பது சொலருக்கு என்று எழுத்து பிழையாகி விட்டது. மன்னிக்கவும்.

Post a Comment