*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 31, 2012

2012 ன் இறுதித் தேநீர்...

அதன் பின்னான
உரையாடல்களை
திசை திருப்ப
முயன்றுகொண்டிருந்தேன்.

அவனோ...
பேசிப்பேசி
உலகின் மொத்த
வார்த்தைகளையும்
முடித்திருந்தான்
இடையில்
பேசும் கிளிகளின்
பேச்சுக்களையும்
கடன் வாங்கியிருந்தான்.

அவனுக்கான
மௌன மொழிகளை
நான்.....
மொழி பெயர்க்கையில்
கோபமாய் இருப்பதாக
ஊகித்துக்கொண்டான் போலும்.

உதடு சுழிக்கும் தோரணையில்
என் விருப்பங்களை
புரிந்துகொண்டிருந்தான்
தாம்பத்யத்தின் அத்துப்படிகளை
என் நுனிவிரல் தொடலில்
அறிவதில் அசகாயசூரன்.

காத்திருப்பும் ஊடலும்
அதிகபட்ச ஆசையாய்
என் உடலிலும் உள்ளத்திலும்
ஒரு சிறுதீயை உதறிவிட்டிருந்தது
நானும் காட்டிக்கொள்வதாயில்லை
நான் என்பதை...

நெருங்கி
குழைந்து
இடைவெளி குறைத்து
சாரலாய்
காதலைக் குடைந்து
ஊற்றும் மந்திரப்
பூக்களை தூவி
சூழலை
விறுவிறுப்பாக்கியவன்....

மௌன மொழிகளடங்கிய
இசைக்கோர்வை
இனிதே நிறைவுற
இரு மலைகள்
மெல்ல நகரத்தொடங்கின
பிரம்ம முகூர்த்தத்தில்.

காலையில் வெட்கி
முகம் மூடியவனை
காது திருகி
தலையில் குட்டி
முத்தம் கொடுத்து
தேநீர் கொடுக்க
மீண்டும் குடிக்கத்தொடங்கினான்
என்னை...!!!

ஹேமா(சுவிஸ்)

22 comments:

சசிகலா said...

2012இதன் பின்னான உரையாடல்களை திசை திருப்ப நான் முயல்கிறேன். அசத்தல் ஹேமா..

இளமதி said...

பேச வார்த்தைகள் இல்லை...இல்லையில்லை தேவையில்லை....:)
மென்மையான உணர்வினை வடித்திருக்கும் விதம் அழகு... அருமை...
வாழ்த்துக்கள் ஹேமா!!!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்!!!

ஆத்மா said...

அவனோ...
பேசிப்பேசி
உலகின் மொத்த
வார்த்தைகளையும்
முடித்திருந்தான்
இடையில்
பேசும் கிளிகளின்
பேச்சுக்களையும்
கடன் வாங்கியிருந்தான்.
/////////////////

wow..அக்கா சூப்பர் கவிதை
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குட்டீஸ் + குடும்பத்துக்கும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... அசத்தல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும்
என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

DiaryAtoZ.com said...

கவிதை அருமை.

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு LIST OF HOLIDAYS

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உணர்வு பூர்வமான கவிதை! இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் said...

இனிய புத்தாண்டில் எண்ணியதெல்லாம் ஈடேற என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி ......

Seeni said...

arumai!


arumai!

inimai!

ilamai!

mmmmm....

பிலஹரி:) ) அதிரா said...

கலக்கிட்டீங்க ஹேமா.. 2012 ஐ இனிய கவிதையோடு வழி அனுப்பி வைக்கிறீங்க.. இனிய புதுவருட வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

ஆஹா.... என்ன வித்தியாசமான தேநீர்! சுவை கூடியிருக்கிறது!

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Angel said...

ஹேமா நலமாப்பா

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும் ..


கவிதை மென்மை அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

Wow..

Anonymous said...

அட்டகாசம் ஹேமா! நல்ல விறுவிறுப்பான தேநீர்தான். :))

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013

பால கணேஷ் said...

கவிதையை மிக ரசித்துச் சுவைத்தேன் ஃப்ரெண்ட். உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

விச்சு said...

காலையில் வெட்கி
முகம் மூடியவனை
காது திருகி
தலையில் குட்டி
முத்தம் கொடுத்து
தேநீர் கொடுக்க
மீண்டும் குடிக்கத்தொடங்கினான்
என்னை...!!!//அவன் திருந்தவே மாட்டானோ?

http://rajavani.blogspot.com/ said...

ஹேமா...என்ன இது...சரிதான் போங்க...நலமா..!!!

வெற்றிவேல் said...

காலையில் வெட்கி
முகம் மூடியவனை
காது திருகி
தலையில் குட்டி
முத்தம் கொடுத்து
தேநீர் கொடுக்க
மீண்டும் குடிக்கத்தொடங்கினான்
என்னை...!!!

நல்லாருக்கு ஹேமா...

மாதேவி said...

ஆகா! காதல் மயக்கம்.

2012 இறுதித் தேநீர். வாழ்த்துகள்.

Post a Comment