*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, June 24, 2013

சொல்லித் தொலைந்தவர்...


கூப்பிய கரங்களுக்குள்
அகப்படாத ஒரு கடவுள்
தோரண நூல்களைப் பிரித்து
வெளிநடப்புச் செய்திருந்தார்
இன்று காலை.

நேற்றுப் பேசிக்கொண்டிருக்கையில்
பறந்தடித்த
புழுதிக் கடதாசியில்
தன் இருப்பிட விலாசத்தை
தந்தும் போயிருந்தார்.

அர்ச்சனைப் பூக்களோடு
ஒரு குழந்தை
தானும் தேடிக்கொண்டிருப்பாதாய்
தெருவழி என் கை பற்றி
வரைந்தும் காட்டியது
கன்னக்குழி ஒட்டிய
அந்தக் கடவுள் முகத்தை.

இரவெல்லாம்
இருவரும் பாடித் தீர்க்கிறோம்
தேவாரம் தவிர்த்து
தாலாட்டுப் பாடல்களை
சொல்லித் தொலைந்தவருக்காக.

அக்கடவுளின்
ஒரு நிமிடச் சலசலப்பு
நீள்கிறது
வெறுமை விலக்கி
காலையும் மாலையும்
தொடரும் இரவும்!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீளும் சலசலப்பை ரசித்தேன்...

இராய செல்லப்பா said...

“கூப்பிய கரங்களுக்குள்//அகப்படாத ஒரு கடவுள்” என்ற சொல்லாட்சி சுவையாக இருக்கிறது. – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

தனிமரம் said...

அக்கடவுளின்
ஒரு நிமிடச் சலசலப்பு
நீள்கிறது//அருமையான பாடுபொருள் !

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Tamizhmuhil Prakasam said...

"அர்ச்சனைப் பூக்களோடு
ஒரு குழந்தை
தானும் தேடிக்கொண்டிருப்பாதாய்
தெருவழி என் கை பற்றி
வரைந்தும் காட்டியது
கன்னக்குழி ஒட்டிய
அந்தக் கடவுள் முகத்தை "

அழகான கவிதை. வாழ்த்துகள் தோழி !!!

சாந்தி மாரியப்பன் said...

//அர்ச்சனைப் பூக்களோடு
ஒரு குழந்தை
தானும் தேடிக்கொண்டிருப்பாதாய்
தெருவழி என் கை பற்றி
வரைந்தும் காட்டியது
கன்னக்குழி ஒட்டிய
அந்தக் கடவுள் முகத்தை.//

வரிகளை மிகவும் ரசித்தேன் ஹேம்ஸ்..

Unknown said...

கன்னக் குழி ஒட்டிய கடவுள்...........ஹும்!!!!!!!!!!!!

வெற்றிவேல் said...

புதுசா இருக்கு ஹேமா...

Post a Comment