*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 16, 2013

என் செல்லக்குட்டி...


சொல்லிக்கொள்ளாமலே போன
உன் நாட்களையும்
உன்னையும் அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறான்
ஒருவன்....
சொல்லிக்கொள்கிறான்
காதல் பொய் என்றும்.

வா.....
வந்து பதில் சொல்
ஆன்மாவாய்
நீ பொய்யா
அன்பும் காதலும் பொய்யா
உன்னை நினைப்பும் பொய்யா.

உனக்கென்ன....
உன்பாட்டில் போய்விட்டாய்
உருகி வழிகிறேன் மெழுகாய்
அவன் பின்னால்
உன் சாடை அவனில் கண்டு
அவனோ உன்னைப்போல் இல்லை
அலட்சியமாய்.

நீ விட்டுப்போன
புத்தகத்துள்
மயிலிறகின்
சாம்பல் நிறக்குட்டிக்கு
உன் பெயர்தான்!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

கீதமஞ்சரி said...

அவனாய் இவனைக் கண்டு அவனையும் இவனையும் ஒப்பிட்டு, அவனை இவனில் எதிர்பார்த்தும் ஏமாந்தும் குழம்பியும் மயங்கியும் தவிக்கும் மனம் மெல்ல மெல்ல, புத்தகத்துள் குட்டி போடும் மயிலிறகு நம்பிக்கை போலவே பிடிவாதமாய் ஏற்கவும் கூடும் சில அவநம்பிக்கைகளையும்.

மனந்தொட்ட கவிதை ஹேமா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உலகை விட்டு சென்ற காதலனை என்னதான் முயன்றாலும் இன்னொருவனைக் கொண்டு நிரப்ப முடியாது.
அழகாக சொல்லி விட்டீர்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாக முடித்துள்ளீர்கள்...

பிலஹரி:) ) அதிரா said...

கவிதை மனதை டச் பண்ணுது ஹேமா....

Seeni said...

engo..!?

aarampiththu!

engo mudichudeenga...

Seeni said...

mmm..!

ஸ்ரீராம். said...

அருமை ஹேமா.

இளமதி said...

அசலைப் போல் நகல் இருக்காது...
அருமை. ரசித்தேன் தோழி!

தனிமரம் said...

உணர்வைத்தூண்டும் கவிதை !

நிலாமகள் said...

கடைசி பத்தியில் தொக்கி நிற்கிறது காதல் உதறா மனசு.

Post a Comment