*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 17, 2012

வா...வா !

எதிர்பார்ப்புக்கள்
இன்றைய தருணங்களை
பூச்சியத்தில் நிறுத்தினாலும்
ஏதோ....எங்கோ
யாரோ ஒருவரிடம்
கைகுலுக்கிக்
காதல் சொல்லும்
ஏமாற்றம் வேண்டாம்
என்பதற்காகவே
கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு !

அப்பப்போ
நாம் பரிமாறிக்கொண்ட
சொற்களைச் சேர்த்தொரு
அன்புக் கோட்டை
தகர்த்தெரியாத
உன் அன்பு மழைக்காக
உன் செல்லப் பூனையோடு
இனி நானும்!!!

ஹேமா(சுவிஸ்)

44 comments:

நெற்கொழுதாசன் said...

நாளைய தருணங்கள்
நிறைவை தரக்கேட்டு .........................
நிறைவான கவி.
எதிர்பார்ப்புகள் தான் வாழவைக்கின்றன ................
வாழ்த்துக்கள் கவிதாயினிக்கு .

திண்டுக்கல் தனபாலன் said...

/// கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு ! ///

அருமை வரிகள்... அந்த திருப்தி போதும்...
நன்றி... வாழ்த்துக்கள்... (TM 1)

Yaathoramani.blogspot.com said...

காதல் சொல்லும்
ஏமாற்றம் வேண்டாம்
என்பதற்காகவே
கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு !

அருமை அருமை
மனம் தொட்ட வரிகள்
தொடர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

//எதிர்பார்ப்புகள் இன்றைய தருணங்களை பூச்சியத்தில் நிறுத்தினாலும்...//

எதிர்பார்ப்புகள் பூச்சியமா, எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது பூச்சியமா?

கனவின் துளிகளில் காதல் கோட்டை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

ஆமினா said...

ஹேமாக்கே உரிய காதல் கவிதை... செம டச்!
வாழ்த்துகள் ஹேமா

பால கணேஷ் said...

காதலை இனிமையாகச் சொன்ன அழகான கவிதை. மிகமிக ரசித்தேன் ஃப்ரெண்ட்.

ஆத்மா said...

உண்மையான அன்பை ஒரு போதுமே தகர்த்தெரிய யாராலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடியாது என்பதே உண்மை....

அழகான வரிகளில் ஆழமான கவிதை...

அம்பாளடியாள் said...

அடடா அன்பென்றாலே உலகின் அனைத்து உயிர்களும்
சரணடைந்து விடும் .பூச்சாரும் அப்படியோ!....படமும்
கவிதையும் அருமை!...பாராட்டுகள் சகோ .

arasan said...

ரசனை நிறைந்த வரிகள் வழங்கிய உங்களுக்கு என் நன்றிகளும் வணக்கங்களும் அக்கா

'பரிவை' சே.குமார் said...

ரசனை மிகுந்த வரிகளில் அழகிய கவிதை.

சசிகலா said...

அன்பு மட்டுமல்ல அதன் வழி வரும் எதிர்பார்ப்பும் நிறைவையே தரும் அல்லவா.. அழகான வரிகள் சகோ.

sathishsangkavi.blogspot.com said...

அழகான வரிகள் ஹோமா...

VijiParthiban said...

அருமை அருமை....அழகான வரிகள்...

சின்னப்பயல் said...

தகர்த்தெறியாத
உன் அன்பு மழைக்காக//

துரைடேனியல் said...

பூனையைக் கொஞ்சுவது போல் காதலையும் கொஞ்சவா? கலக்குறிங்க!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகிய கவிதை

வெற்றிவேல் said...

நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு !

கலக்கல் தோழி...

”தளிர் சுரேஷ்” said...

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகையில் ஆறுதலை தேடும் அழகிய வரிகள்! சிறப்பு!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




Athisaya said...

வாழ்த்துக்கள் கவிதாயினி அக்கா.எப்பவுமே உங்க கவிதைகளுக்ககு;டான கவர்ச்சியும் அதீதமும் இங்கும்.வாழ்த்துக்கள் சொந்தமே!

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

manichudar blogspot.com said...

நேற்றைய தருணங்களின் பூச்சியத்தை, நிறைவாக்கிய இன்றைய தருணங்களின் அன்பு தகர்த்தெறிய இயலா கோட்டையாவது கவி மனதிற்கே வாய்ப்பாகும். படமும், கவிதையும் அழகு.

தனிமரம் said...

ம்ம் நாளைய எதிர்பார்ப்போடு பயணிப்பது தானே வாழ்க்கையும்!ம்ம் அருமையான உவமைகள்§

பிலஹரி:) ) அதிரா said...

//உன் அன்பு மழைக்காக
உன் செல்லப் பூனையோடு
இனி நானும்!!! //

அவ்வ்வ்வ்வ் மீயும் மீயும்...:)

கவிதை அதுவும் பூஸோடு... என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போச்சூஊஊஊஉ... அழகான படமும் ஹேமா!!.

கவி அழகன் said...

Alakiya padamum arumaiyana varikalum

MARI The Great said...

நல்ல கவிதை!

Unknown said...

அழகான வரிகள்.. அருமை..

நம்பள்கி said...

உங்கள் தளம் Best!
எந்த டெம்ப்ளேட்?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எதிர்பார்த்து ஏமாறுவதைவிட சிந்தித்து நடப்பதி நல்லதுதான்,அழகாய்ஸ் சொல்லும் கவிதை

Prem S said...

உங்கள் தளத்தை முன்பே follow செய்து இருக்கிறேன் ஆனால் உங்கள் பதிவுகள் எனது dashboard இல் வருவதில்லை ஏனோ

ராமலக்ஷ்மி said...

/கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு !/

அருமை. அழகான கவிதை.

பித்தனின் வாக்கு said...

good

பித்தனின் வாக்கு said...

good hemu

அருணா செல்வம் said...

கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு !

நாளைய ஏமாற்றம் இன்றே தெரிந்துவிட்டால்...
நிறைவைத் தருமா?
என் இனிய தோழி ஹேமா...

Rasan said...


அருமையான வரிகள். அழகான கவிதை. தொடருங்கள்

என்னுடைய தளத்தில் தன்னம்பிக்கை

Anonymous said...

'சொற்களை சேர்த்தொரு அன்பு கோட்டை
தகர்தெரியாத உன் அன்பு மழைக்காக'

பிரமாதம்! மிகவும் ரசித்தேன் ஹேமா.

உங்களுடன் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நலம்தானே!

Bibiliobibuli said...

அன்புமழை நிறையப் பொழியட்டும்.

மாலதி said...

சில கவிதைகள் உள்ளத்தைக் கவரும் சில கவிதைகள் உள்ளத்தில் கனத்தை உண்டாக்கும்

விச்சு said...

நன்றி... ”நாம் பரிமாறிக்கொண்ட சொற்களைச்சேர்த்து ஒரு அன்புக்கோட்டை கட்டியதற்கு”... கோட்டையை காவல் காக்கும் காவல்காரனாக இருக்கிறேன்.

விச்சு said...

அன்புமழை எப்போதும் பெய்யும். அது ஒரு அழகான சாரல். தென்றலுடன் சேர்ந்து பெய்யும்.

வெற்றிவேல் said...

அன்புக் கோட்டை
தகர்த்தெரியாத
உன் அன்பு மழைக்காக
உன் செல்லப் பூனையோடு
இனி நானும்!!!

அருமை தோழி.
அன்பு மழை கண்டிப்பாக பெய்யும்
காலம் கனியும் வேலையில்...

Anonymous said...

கவிதை நன்று:)

ஹேமா said...

நெற்கொழுதாசன்....சின்னக் காட்டான் மாமா முதல் வருகைக்கு நன்றி...தொடர்ந்தும் வாங்கோ !

தனபாலன்...அன்புக்கு நன்றி எப்போதும் !

ரமணி ஐயா...உங்கள் வாழ்த்து எப்போதும் கிடைக்க என் மகிழ்ச்சி !

ஸ்ரீராம்....எதிர்பார்புகளின் நிறைவேற்ரம்தான் பூஜ்ஜியம் !

நண்டு....ஒரு ‘ம்’ல் ஆயிரம் அர்த்தங்கள் காண்கிறேன் !

ஆமினா...சுகமா தோழி.ரொம்ப நாளாச்சு.கண்டதில் சந்தோஷம் !

கணேஸ்...என் ஃப்ரெண்ட் எப்பத்தான் நான் எழுதி சரில்ல சொன்னார் !

சிட்டுக்குருவி...அன்பின் ஆழம் மனம்வரை...அது இறப்பின் பின்னும் தொடரும் !

அம்பாளடியாள்...திரும்பவும் காண்கிறேன்.அன்போடு வரவேற்கிறேன் !

அரசன்....வாங்கோ வாங்கோ.இப்பல்லாம் எப்பாச்சும்தான் இந்தப்பக்கம் !

குமார்....வாங்கோ.நன்றி !

சசிகலா...உங்கள் பக்கம் வரக் கஸ்டமாயிருக்கே.அது ஏன் ?

சங்கவி...சந்தோஷம் !

விஜி....தங்கள் ரசனிக்கு மகிழ்ச்சி !

சின்னப்பயல்...உங்கள் கவிதைக்கு ஈடா...என்றாலும் சந்தோஷம் !

துரைடானியல்...மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி !

ராதா ஐயா...உங்கள் பக்கமும்,அன்ரியின் பக்கமும் வரவே முடியவில்லை.ஒரே ஆட்டம் ஆடுது.கவனிச்சீங்களா ?

ஹேமா said...

சுரேஷ்....

அதிசயா....

ஜெயஜோதி....முதல் வருகைக்கு நன்றி !

தனிமரம்...

அதிரா....உங்கட பூஸாரை நான் களவெடுக்கேல்லப்பா !

கவி அழகன்....

வரலாற்றுச் சுவடுகள்....

சிநேகிதி....

நம்பள்கி...

முரளி....

பிரேம்....

ராமலஷ்மி அக்கா ....

பித்தனின் வாக்கு....சாமி பாதயாத்திரை முடிஞ்சு திரும்பிட்டீங்களா ?!

அருணா...

ராசன்...முதல் வந்திருக்கீங்க வணக்கம் ராசன் !

மீனும்மா...நான் நல்ல சுகம் தோழி.நீங்களும்தானே.கொஞ்சம் வேலை கூடிப்போச்சு.புதுசா முகப்புத்தகம் அறிமுகமாகி அங்கேயும் நேரம் செலவழியுது.ஹிஹிஹி !

ரதி...ம்ம்ம்ம்ம் !

மாலதி....பிடிச்சிருக்கா கவிதை ?!

விச்சு....என்ன வாத்தியாரே எப்ப காவல்காரனா மாறினீங்க.வீட்டுக்காரம்மாவுக்கு எப்பவோ காவல்காரன் தானே....ரசிப்புக்கும் அன்புக்கும் நன்றி விச்சு !

இரவின் புன்னகை...உங்கள் தமிழின் தேடலுக்கு நான் விசிறி....

மழை நெட்....நன்றி வருகைக்கு !

நான் விட்டு விட்டு எழுதினாலும் அத்தனை அன்புள்ளங்களைக் காண்பதில் சந்தோஷம்.கை கோர்ப்போம் தோழர்களே !

Angel said...

எதிர்பார்ப்புக்கள்
இன்றைய தருணங்களை
பூச்சியத்தில் நிறுத்தினாலும்//


ஆரம்ப வரிகளே அசத்தல் ...அழகிய காதல் கவிதை அதில் பூசாரும் அழகு

Post a Comment