*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 22, 2009

சொல்வதற்கில்லை...

சொல்வதற்கில்லை...
எங்கு சரி....யார் தப்பு.
அழிவு அழிவு...
முற்றுப்பெறாத முடிவிலியாய் வாழ்வு.
நிமிடங்கள் கூட நிச்சயமற்றதாய்.
அக்கிரமங்கள் ஆக்கிரமிக்க
இயற்கையின் அகோர தாண்டவம்.
தானே உண்டாக்கிய கர்வத்தில்
உயிர்களின் உயிரோடு விளையாடியபடி.

ஏப்பமாய் பிரசவிக்கிறது
ஆயிரமாய்...இலட்சமாய்
உயிரகளை விழுங்கிய இயற்கை.
கடலாய்...மண்சரிவாய்...வெள்ளமாய்...
புயலாய்...தீயாய்...நோயாய்...
பட்டினியாய்...போராயும் கூட.
வானம் தவறிய பெய்கையால் விவசாய அழிவு.
உயரும் வாழ்க்கைச் செலவு.

மனிதன் வாழ்வும் வளமும்
இயற்கையின்றிச் சாத்தியமில்லை.
வாரி வழங்கும் இயற்கையே
எரிச்சலோடு போர் அரக்கனாய்.
தன்னையே பரீட்சிக்கும் மனிதனுக்கு
எதிராய்...
தானும் ஆயுதம் தூக்குகிறதோ!

உலகம் எங்கும்
கூச்சல்...அவலம்...
கூக்குரல்...இரத்தம்...இறப்பு
என்னதான் நடக்கிறது?
யாரை...எவரை...எதை
நினைத்தாலும் மனம் சங்கடமாய்.

இதில் எப்படி...
எம் வெற்றி கொண்டாட?
இதுவரை தமிழன்...
வென்றதும் பெரும் வெற்றிதான்.
இனியும் வெற்றி மேல் வெற்றிதானே!
முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!
தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்.
சொல்வதற்கு இல்லை...
இனி என்னதான் நடக்கும்!!!
எதுவும் ஆகும்!!!

[மீள்பதிவு]
ஹேமா(சுவிஸ்)

50 comments:

sathishsangkavi.blogspot.com said...

//இதுவரை தமிழன்...
வென்றதும் பெரும் வெற்றிதான்.
இனியும் வெற்றி மேல் வெற்றிதானே!
முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!//

காலத்திற்கேற்ற வரிகள்........

S.A. நவாஸுதீன் said...

எல்லாம் சொல்லியாகிவிட்டது. இனி சொல்வதற்கொன்றுமில்லைதான்

சத்ரியன் said...

//முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!//

ஹேமா,

ஆரம்பமே தான்.

(மீள்பதிவென்றாலும்... மீள்பதிவென்பதால் தான் என்னால் வாசிக்க நேர்ந்தது..)

அப்துல்மாலிக் said...

சொல்வதற்கில்லைனு தலைப்புலேயே சொல்லிட்டீங்க, இனிமேல் நாமலே நொந்துக்கிட்டாதான் உண்டு

மீள் பதிவா.. இருந்தாலும் எனக்கு இது புதுசு

Ashok D said...

present teacher

க.பாலாசி said...

//ஏப்பமாய் பிரசவிக்கிறது
ஆயிரமாய்...இலட்சமாய்
உயிரகளை விழுங்கிய இயற்கை.
கடலாய்...மண்சரிவாய்...வெள்ளமாய்...
புயலாய்...தீயாய்...நோயாய்...
பட்டினியாய்...போராயும் கூட.
வானம் தவறிய பெய்கையால் விவசாய அழிவு.
உயரும் வாழ்க்கைச் செலவு.//

சரிதான் எத்தனை பேரிடர்கள்...

//தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்.//

உண்மை...அத்தனையும உண்மை...

நல்ல கவிதை...

மேவி... said...

ஹேமா, இது என்ன மீள் பதிவா ???

நல்ல இருக்கு ....அதுவும் ரெட் கலர் இன்னும் கவிதைக்கு உணர்ச்சி அளிக்கிறது

"தந்திரங்களால் சுரண்டப்படுகிறது
சுதந்திரம்"

எல்லா இடத்திலும் இதே நிலைமை தான் .......

thiyaa said...

உங்களின் மீள் பதிகையா சந்தோசம் நான் முதலில் பாக்கலை
காலத்துக்கேற்றது.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாருக்கு...ஹேம்ஸ்...

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.......

ஜெயா said...

உணமை அத்தனையும் உண்மை, முற்றுப்பெறாத முடிவிலியாய் வாழ்வு,நிமிடங்கள் கூட நிச்சயமற்றதாய், அழகான வரிகள். மீள் பதிவானாலும் எனக்கும் புதிது, நன்றி சகோதரி வாழ்த்துக்களுடன்******

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதையிலும் வாழ்வை பத்தி சொல்லிட்டீங்க ஹேமா

நல்ல கவிதை சூப்பர்

அன்புடன் அருணா said...

/தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்./
நல்லாருக்கு ஹேமா!

புளியங்குடி said...

முதலில் புரியவில்லை. நான்கு படித்த பிறகுதான் புரிந்தது. எனக்குப் புரிந்தபடி, கவிதை சூப்பர்.

துபாய் ராஜா said...

ஆம் ஹேமா. தமிழர்தம் போராட்டம் முற்றிலுமாக அடக்கப்படவில்லை.... தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்....

தமிழ் உதயம் said...

இயற்கையோடு கூட பிறந்தது... அழிவு. மனிதரோடு கூட பிறந்தது... பேரழிவு. அழிவதெல்லாம் உருவாகவே. உருவாவதெல்லாம் அழியவே.

அத்திரி said...

வழக்கம் போல் அருமை

M.S.R. கோபிநாத் said...

சூப்பரா இருக்கு ஹேமா. கலக்கல்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள் சகோதரி.. நீங்கள் சொல்வது போல எந்த ஒரு முடிவுமே மற்றொரு தொடக்கத்துக்கு ஆரம்பம் தானே..

விஜய் said...

நினைவை மீள வைக்கும் பதிவு

விஜய்

இராகவன் நைஜிரியா said...

//சொல்வதற்கு இல்லை...
இனி என்னதான் நடக்கும்!!!
எதுவும் ஆகும்!!! //

தெரியலையே...

பிரபாகர் said...

இதுபோன்று கவிதைகளால் நமது எண்ணங்களை வெளிப்படுத்துவதையன்றி வேறென்ன செய்ய இயலும் சகோதரி!

கவிதை அருமை, கருத்துக்களால் மனதிற்கு வலி...

பிரபாகர்.

- இரவீ - said...

ஹேமா,
நீங்க நிசம்னு நினைக்கிறது நிசமும் இல்ல.
நிசமில்லைனு நினைக்கிறது நிசமில்லைனும் இல்லை.

நிசமில்லைகிற போது நிசமில்லாதது நிசமாகிரது.
அதுவே நிசமில்லைகிறது நிசமானா, நிசமில்லாம போகிறது.

அப்பாதுரை said...

இரவீ - தலை சுத்துதே? (தலை சுத்துறதும் இயற்கையின் சதியா?)


போருக்குக் காரணம் இயற்கை என்கிறீர்களா ஹேமா?

அன்புடன் நான் said...

முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!//

என‌து ஆசையும்... இதுவே.

Anonymous said...

மீள் பதிவென்றாலும் இன்னும் மீளவில்லையே சோகம்....

// முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!//

எல்லா சூழலும் பொருந்தும் வார்த்தை

thiyaa said...

ஆகா அருமை

Kala said...

ஆம்!! சொல்வதற்கில்லை!
எல்லாவற்றியும்
உங்கள் வரிகள்தான் சொல்கின்றதே! வலியால்....
வெளி வந்த வேதனை முனகல். அத்தனையும்!!

நன்றி ஹேமு....ஹேம்ஸுஊஊஊஊஊஊ

அடுத்து----------------------???நான்
காத்திருக்கின்றேன்!!!???
கொடுத்து வைத்த எழுத்துகள் {ஹே.....மா}
இவை இரண்டையும் சுருக்கிச் சுருக்கி
கொய் தகம் வைக்கிறார்கள்.
ம்மம்மம்மம்ம்மம்ம்ம்ம....................................
பெருமூச்சு ஹேமா.

rvelkannan said...

மீள் பதிவு .. இருப்பினும் சுடும் கவிதை

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை அழகு
காலத்திற்கேற்ற வரிகள்..

ஸ்ரீராம். said...

எந்த சூழலுக்கும் பொருந்தும் கவிதை...எந்தக் காலத்திலும் பொருந்தும்...அதனால்தான் மீள் கவிதை ஆள்கிறது...

பூங்குன்றன்.வே said...

/தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்.//

மிக உண்மை.கூடியசீக்கிரம் வெல்வோம்.

நசரேயன் said...

ம்ம்ம்

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்குங்க...
நிறைய விஷயம் கவிதைகள் பேசுகிறது...

Muniappan Pakkangal said...

Mutrupulli illai,you are exact Hema.

நட்புடன் ஜமால் said...

ஏப்பமாய் பிரசவிக்கிறது
ஆயிரமாய்...இலட்சமாய்
உயிரகளை விழுங்கிய இயற்கை.
கடலாய்...மண்சரிவாய்...வெள்ளமாய்...
புயலாய்...தீயாய்...நோயாய்...
பட்டினியாய்...போராயும் கூட.
வானம் தவறிய பெய்கையால் விவசாய அழிவு.
உயரும் வாழ்க்கைச் செலவு.]]

ஒன்றும் சொல்வதற்கில்லை ...

சப்ராஸ் அபூ பக்கர் said...

////யாரை...எவரை...எதை
நினைத்தாலும் மனம் சங்கடமாய்.///

வரிகளும், வரிகள் தான்....... Superbbbbb ...............

வாழ்த்துக்கள் அக்கா...............

Thenammai Lakshmanan said...

//முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!
தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்//

இரண்டுமே அருமை ஹேமா அற்புதமாய் வந்து இருக்கிறது உங்கள் உணர்வுகள்

சிங்கக்குட்டி said...

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

na.jothi said...

எல்லா முடிவும் மற்றொன்றிற்கு
ஆரம்பம் தான்

சந்தான சங்கர் said...

தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்.//

உண்மைதான் தோழி..


தந்திரம் செய்யும்
யந்திரமாய்...
சுதந்திரமற்ற சூழலில்
இயற்கையும்
இயங்கமுடியாமல்
வெடித்து சிதறுகிறது..

Admin said...

அத்தனை வரிகளையும் இரசித்தேன். அருமையான வரிகள்

அனைவருக்கும் இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்

ஹேமா said...

நேரப் பற்றாக்குறை.நத்தார் புதுவருடத்தால் வேலை இடத்தில் கூடிய நேர வேலை.அதனாலேயே மீள்பதிவொன்றைப் பதிவாக்கினேன்.

அன்போடு வந்து கருத்துக்கள் தந்த அத்தனை அன்பு நண்பர்களுக்கும் என் நன்றி.இனிய நத்தார் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

புதிதாய் என்னோடு இணைந்துகொண்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மிக்க மிக்க நன்றி.

priyamudanprabu said...

//முற்றுப்புள்ளியென்றாலே...
அடுத்து ஆரம்பம்தானே!//

அமாங்க ஆமா

ரிஷபன் said...

தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்.
சொல்வதற்கு இல்லை...
வலிக்கிறது மனசுக்குள் உண்மை..

Anonymous said...

Darling

The red fonts are too hard on the eyes...

wellwisher

பூச்சரம் said...

பூச்சரம்

இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம்

DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

www.poosaram.tk

யாழினி said...

நல்லாயிருக்கு ஹேமா! :)

"உழவன்" "Uzhavan" said...

//தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்//
 
இந்த வரி ரொம்ப நல்லாருக்கு ஹேமா :-)

விச்சு said...

//தந்திரங்களால் சுரண்டப்படுகிறது சுதந்திரம்//

Post a Comment