சில சேமிப்புக்கள் உனக்காக...சாதகப் பறவையின் இசை
அசையும் மேகத்தின்
அழகு
பலகனியின் பூக்கும்
ஊதாநிற ஓர்குட்
எனக்கு மட்டும் புரிகிறமாதிரி
கிளிஞ்சலால் ஒட்டிய
உன் முகம்
சில பாடல்கள்
கார் கண்ணாடியின் பின்புறத்தில்
உன் போட்டோ
உனக்காக மாற்றிய
சில உணவுகள்
பனிப்புகாரில் எழுதிய
உன் பெயர்
உருட்டிய ஐஸ் மனிதனில்
உன் உருவம்
துயிலெழுப்பும்
சூரியக் கதிர்
அத்தனையிலும் சேமித்த
உன்னை...
எனக்குள் சேமிக்க....!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||








