*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, November 09, 2012

பெருந்தவம்...


அவனைத் தேடிப் புறப்பட்டு
காற்றில்லாத் தனித் தீவுக்குள்
வெளிவரத் தெரியவில்லை
ஒரு துளி காற்று வரம்
தேவை எனக்கிப்போ.

இரவும் பகலுமில்லா
மம்மல் பொழுதது
அவன் நிறம்
அதுவாக இருப்பதால்
விட்டு வர விருப்பமில்லை
நிறைக்கிறேன்
எனக்குள் முட்ட முட்ட.

எப்படியிருப்பான்
எங்கிருப்பான்
மீசை இருக்குமா
ஏன் முகம் மறைக்கிறான்
பூச்சாண்டியாய்.

நாம் சுகித்திருந்த தருணங்களில்
மழையாய் நனைத்திருந்தான்
குரல் கேட்டுச் சிரித்த நேரத்தில்
ஒரு வசீகரம்
தீராத விம்ப மயக்கம்
தீரவேண்டாம் எனக்கிப்போ.

காற்று வரட்டும்
மயக்கம் தெளிய தென்றலாய்
அவன் எனக்கு
காத்திருப்பேன் தனித்தீவில்
பெருந்தவம் செய்துகொண்டு
வரவே மாட்டான்
எனத் தெரிந்துகொண்டே!!!
 
ஹேமா(சுவிஸ்)

31 comments:

பிலஹரி:) ) அதிரா said...

ஆஆஆஆ மீ த 1ஸ்ட்டூஊஊஊஊ:)

வெல்கம் பக் ஹேமா.....

என்னாது வந்ததும் வராததுமா சோகக் கவிதை என்னாச்சு ஹேமா?:).

//காத்திருப்பேன் தனித்தீவில்
பெருந்தவம் செய்துகொண்டு
வரவே மாட்டான்
எனத் தெரிந்துகொண்டே!!!///

முடிவு தெரிந்தபின், ஏன் இந்தக் காத்திருப்பு?:))..

ஹேமா said...

அதிரா....வாங்கோ.சந்தோஷம் முதல் வந்ததுக்கு.விடுமுறை சந்தோஷமாக இருந்தாலும் மனதில் ஒரு சலிப்புத்தான்....சோகக்கவிதை எப்பவும் சும்மா சும்மா சும்மாதான் !

அம்பாளடியாள் said...

காற்று வரட்டும்
மயக்கம் தெளிய தென்றலாய்
அவன் எனக்கு
காத்திருப்பேன் தனித்தீவில்
பெருந்தவம் செய்துகொண்டு
வரவே மாட்டான்
எனத் தெரிந்துகொண்டே!!!

உங்கள் வரவைக் காண நான் கூட
காத்திருந்தேன் வந்துவிட்டீர்களே
சகோதரி இன்பக் கவிதையில் சிறு
ஏக்கமும் தாங்கிய வண்ணம் !!.....

அம்பாளடியாள் said...

0764105257 ஒருமுறை இந்த இலக்கத்திற்கு அழைப்பு விடுங்கள் சகோதரி .

மகேந்திரன் said...

இத்தனை மாதவம் செய்யும்
பெருந்தேவியை
பொருட்டாக மதியாதவன்
உலகினில் உண்டோ....
தவம் முடியும் தருவாயில்
விழி திறந்து பார்த்தால்
அங்கே வழி காத்து நிற்பான்....

நிலாமகள் said...

சுக‌ராக‌ம் சோக‌ம் தானே...!

Angel said...

வருக வருக கவியரசி !!!
நான் தான் முதலில் வந்தேன் ..அதிராகிட்ட சொல்லிடுங்க
இரவும் பகலுமில்லா
மம்மல் பொழுதது//

மம்மல் பொழுதுக்கு விளக்கம் யோசித்துக்கொண்டே பின்னூட்டமிடாமல் போயிட்டேன்
..

//காற்றில்லாத் தனித் தீவுக்குள்
வெளிவரத் தெரியவில்லை
ஒரு துளி காற்று வரம்
தேவை எனக்கிப்போ.//
அழகான வரிகள்

ஆத்மா said...

காத்திருப்பில் சுய நலம் இருந்தால் காத்திருப்பும் சுகம்தான் எனக்கு.....

இந்தக் காத்திருப்பில் சுயநலம் உண்டோ.....

நீண்ட நாட்களின் பின்னான வருகை கண்டதில் மிக்க சந்தோசம் கவிதாயினி :)

ஸ்ரீராம். said...

நிலாமகள் கோட் செய்திருக்கும் வரிகள் பொருத்தம். இதே கொஞ்சம் எதிர் திசையிலிருந்தும் யோசித்து ஒருமுறை எழுதுங்களேன் ஹேமா...! :))

அருமையானதொரு கவிதையுடன் விடுப்பு முடிந்து இணைந்திருக்கிறீர்கள். சமீப வலைச்சர வார வாய்ப்பு 'எங்களுக்கு'க் கிடைத்தபோது உங்களை, உங்கள் எழுத்தை அங்கு பகிரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் சந்தோஷம்!

சின்னப்பயல் said...

ஒரு துளி காற்று வரம்//

மாதேவி said...

வாருங்கள் ஹேமா.

"காத்திருப்பேன் தனித்தீவில்
பெருந்தவம் செய்துகொண்டு
வரவே மாட்டான்
எனத் தெரிந்துகொண்டே!!!

மனத்தை வருத்துகின்றது.

விச்சு said...

கவிதை வழக்கம்போல் அருமை.
"காத்திருப்பேன் தனித்தீவில்
பெருந்தவம் செய்துகொண்டு
வரவே மாட்டாள்
எனத் தெரிந்துகொண்டே!!!

விச்சு said...

நீங்கள் வந்ததால் இனி வலைப்பூ இனி தினமும் பூக்கும் என நினைக்கிறேன்.

பால கணேஷ் said...

பெருந்தவம் அருமை. மம்மல் பொழுதது என்ற வார்த்தை மனதை நிறைத்தது. மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஃப்ரெண்ட். தொடர்ந்து எழுதுங்கோ...

துபாய் ராஜா said...

//அவளைத் தேடிப் புறப்பட்டு
காற்றில்லாத் தனித் தீவுக்குள்
வெளிவரத் தெரியவில்லை
ஒரு துளி காற்று வரம்
தேவை எனக்கிப்போ.

இரவும் பகலுமில்லா
மம்மல் பொழுதது
அவள் நிறம்
அதுவாக இருப்பதால்
விட்டு வர விருப்பமில்லை
நிறைக்கிறேன்
எனக்குள் முட்ட முட்ட.

எப்படியிருப்பாள்
எங்கிருப்பாள்
ஏன் முகம் மறைக்கிறாள்
பூச்சாண்டியாய்.

நாம் சுகித்திருந்த தருணங்களில்
மழையாய் நனைத்திருந்தான்
குரல் கேட்டுச் சிரித்த நேரத்தில்
ஒரு வசீகரம்
தீராத விம்ப மயக்கம்
தீரவேண்டாம் எனக்கிப்போ.

காற்று வரட்டும்
மயக்கம் தெளிய தென்றலாய்
அவள் எனக்கு
காத்திருப்பேன் தனித்தீவில்
பெருந்தவம் செய்துகொண்டு
வரவே மாட்டாள்
எனத் தெரிந்துகொண்டே!!!//

காதலியைப் பிரிந்த காதலனாய் கவிதையில் சிறு மாற்றம் செய்து படித்தபோதும் சிறப்பாகவே இருந்தது அருந்தவம். வணக்கம்.வாழ்த்துக்கள்.

இளமதி said...

அன்புத்தோழி ஹேமா!
இங்கு என் முதல் வணக்கம்_()_..:))

மனதை நெருடும் கவிதை....சோகத்திலும் சுகமுண்டு என்பது இதுதான்.

விரும்பியது கிடைக்கா விட்டால்...... கிடைத்ததை விரும்பு என்பார்கள்.....
எனக்கும் (சோகம்) பிடித்தது...;)

வாழ்த்துக்கள் தோழி!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... மனதை நெகிழ வைத்தது... தொடர வாழ்த்துக்கள்... tm5

அப்பாதுரை said...

மிக அழகான கவிதை.
மம்மல் - புதுச் சொல். beautiful.
welcome back!

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான கவிதை ஹேமா.

நல்வரவு. விடுமுறை இனிதாகக் கழிந்திருக்கும் என நம்புகிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை! வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

எங்கே ஹேமாவைக் காணோமேன்னு பார்த்தேன்!

Anonymous said...

பலன் கிடைக்க போறதில்லைன்னு தெரிஞ்சும் பெருந்தவம். அதுலேயும் ஒரு சுகம். ம்ம்ம்...

அழகான கவிதை ஹேமா. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Ashok D said...

தனித்திவுல என்ன கிடைக்கும் எப்படி பொழைக்கறது...? பேசாம அவர் இருக்கற நகரத்துக்கு கிளம்பவேண்டியதுதானே? எனக்கென்னமோ அவர் வரக்கூடாதுன்னே தவமிருக்கறாமாதிரியே தெரியுது? :)

இராஜராஜேஸ்வரி said...

மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

Anonymous said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

வெற்றிவேல் said...

காத்திருங்கள்...
கண்டிப்பாக வந்துவிடுவான் அவன்...

அருமை ஹேமா...

இனிய தீபாவளி நல வாழ்த்துகள்...

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

அருணா செல்வம் said...

காத்திருப்பதும் பெருந் தவம் தான்...

அழகான கவிதை என் இனிய தோழி ஹேமா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

வானவில் ஜீவா said...

காற்று வரட்டும் மயக்கம் தெளிய தென்றலாய்
அவன் எனக்கு காத்திருப்பேன்.அருமையான கவிதை,
இனிய தீபாவளி வாழ்த்துகள்,ஹேமாக்கா.

ஹேமா said...

என் அன்பு உறவுகள் எல்லாருக்குமே என் அன்பான தீபத் திருநாள் வாழ்த்துகள்.....என்னை மறக்காமல் என் பக்கம் வந்ததும் கண்டதும் சந்தோஷம்.என்னைத் தேடினவங்களுக்கும் நன்றி !

துபாய் ராஜா....கலக்கிட்டீங்க கவிதை நல்லாவே இருக்கு.நீங்கள் மாற்றியமைச்சபோது இன்னும் ரசித்தேன்...அழகு !

நடா....வந்திட்டேன்...எங்க தேடினீங்க...சந்தோஷம் !

Seeni said...

perum thavam....


perum inpam...

Post a Comment