*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, May 12, 2011

மே 12 - 18...2011.

உயிர் மூச்சு.
~~~~~~~~~~~~~~
நிலவாழ் குழந்தைகளுக்காகவும்
நிலக்கீழ் குழந்தைகளுக்காவும்
ஈரவிழிகளோடு ஈழத்தாய்.

உயிர் மூச்சோடு
மண்ணுக்குள் மூடினாலும்
இழுத்து முடித்த இறுதி மூச்சு
தாய் மண்ணில்.

மூச்சடைக்க
நினைவுகள் மறையும்போதும்
ஒற்றைச் சொல் உதிர்ந்திருக்குமோ
தமிழீழத் தாயகமென!!!





பதிலில்லாக் கேள்விகள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிணங்கள் இன்னும்
மூச்சுவிட்டபடிதான் ஈழத்தில்
இறுதி மூச்சின் பதில்களுக்காய்.

அப்பா எங்கே
கணவனைக் கண்டீர்களா
என்னை ஏன் சுட்டார்கள்
முள்வேலிக்குள் ஏன் இன்னும்
இது நான் பிறந்த தேசமா
ஏன் நான் அகதியாய்...

பிணங்களின் கேள்விகள்
அவர்களின் காதுகளுக்கு
எட்டப்போவதில்லை எப்போதுமே!!!

ஹேமா(சுவிஸ்)

29 comments:

Yaathoramani.blogspot.com said...

ஈழத்தில் பிணங்கள் புதைக்கப் படுவதாக
நான் கேள்விப்பட்டதே இல்லையே
விதைக்கத்தானே செய்வார்கள்
விதைத்தவைகள் எல்லாம்
ஒட்டுமொத்தமாய் ஒரு சமயம் விளையும்.....
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Chitra said...

மனதை கனக்க செய்து விட்டது.

தமிழ் உதயம் said...

மண்ணுக்குள் புதைந்தது மனிதர்கள் மட்டுமல்ல... நியாயங்களும் கூட - ஆனால் அவர்களுக்கு தெரியாது... கனவும், தாகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பது.

ஜோதிஜி said...

உங்கள் கவிதைக்கு மணிமகுடம் தமிழ் உதயம் விமர்சனம்.

நிரூபன் said...

இன்றைய ஈழத்தின் யதார்த்த நிலையினையும், அவலத்தினையும் உங்கள் வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகள் நிரம்பி வழியும் வண்ணம் படைத்துள்ளீர்கள் சகோ.

காலங்கள் ஓடலாம், எம் கடந்த கால நினைவுகள் மட்டும் எம்மை விட்டு அழியாது சகோ.

Anonymous said...

///பிணங்கள் இன்னும்
மூச்சுவிட்டபடிதான் ஈழத்தில்
இறுதி மூச்சின் பதில்களுக்காய்.

அப்பா எங்கே
கணவனைக் கண்டீர்களா
என்னை ஏன் சுட்டார்கள்
முள்வேலிக்குள் ஏன் இன்னும்
இது நான் பிறந்த தேசமா
ஏன் நான் அகதியாய்...

பிணங்களின் கேள்விகள்
அவர்களின் காதுகளுக்கு
எட்டப்போவதில்லை எப்போதுமே!!!/// உண்மை தான் பதில் இல்ல கேள்விகள்.. என்றும் நினைவுகளில் இருந்து அகல மறுக்கும் கொடிய நாட்கள்

ராஜ நடராஜன் said...

//மூச்சடைக்க
நினைவுகள் மறையும்போதும்
ஒற்றைச் சொல் உதிர்ந்திருக்குமோ
தமிழீழத் தாயகமென!!!//

இதே நினைவில் நானும்!

சத்ரியன் said...

விடை தெரியும் நாள்
வெகு தொலைவில் இல்லை.

கலா said...

அப்பா எங்கே
கணவனைக் கண்டீர்களா
என்னை ஏன் சுட்டார்கள்
முள்வேலிக்குள் ஏன் இன்னும்
இது நான் பிறந்த தேசமா
ஏன் நான் அகதியாய்\\\\\\\\\

அனுபவப்பட்டதனால் ...காயத்தில்
சுடுநீர்ஊற்றினால் எப்படியிருக்கும்!
அப்படித்தான் இவ்வரிகளால்...என்
எண்ணங்களும்,நினைவுகளும்...
தொலைத்தவற்றைத் தேடுகின்றன....
{கிடைக்கமுடியாதொன்றை!!}
யார்யாருக்கு ஆறுதல் சொல்லமுடியும்
ஹேமா? பெருமூச்சுதான் வெளிப்பாடு!!

ஸ்ரீராம். said...

கேள்விப்பட்ட, படித்த மனம் பதறவைத்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன கவிதையைப் படிக்கும் போது. அந்த ஈழத் தாய்க்கே இவர்களும் நம் பிள்ளைகள்தான் என்ற எண்ணம் மறந்து, மறைந்து போகும் போலும்.

Unknown said...

கண்ணீர் மட்டும்...

கவி அழகன் said...

கருத்து போட கன நேரம் ஜோசித்தேன் ஒன்றும் வரவில்லை கண்ணீரை தவிர

கவி அழகன் said...

பிளாக்கர் கொஞ்சநாளாக முடங்கிவிட்டது அதனால் உடனடியாக வரமுடியவில்லை

சி.பி.செந்தில்குமார் said...

>>நிலவாழ் குழந்தைகளுக்காகவும்
நிலக்கீழ் குழந்தைகளுக்காவும்

ஓப்பனிங்க்லயே மாஸிவ் அட்டாக்

Ashok D said...

:(

test said...

:-(

ராஜ நடராஜன் said...

//மூச்சடைக்க
நினைவுகள் மறையும்போதும்
ஒற்றைச் சொல் உதிர்ந்திருக்குமோ
தமிழீழத் தாயகமென!!!//

இந்த வரிகள் பற்றி இதே நினைவில் என முன்பே சொல்லியிருந்தேன்.அதே வார்த்தைகளை மீண்டும் பிரசவிக்க இயலவில்லையென்றாலும் கரு இதுதான்.

சக்தி கல்வி மையம் said...

வலிகள் கண்ணீருடன்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

காலம்தான் மருந்திடமுடியும் ஹேமா.

தனிமரம் said...

ஓற்றைச் சொல் உதிர்த்திருக்குமே! 
எத்தனை அழமான வரிகள் நாம் வாழ தாம் வாழ்ந்தவர்களில் முதன்மையானவர்கள் அவர்கள்!
 இரண்டு நாளாக வலையில் ஏற்பட்ட தடங்களால் பின்னுட்டம் பிந்திவிட்டது!

கீதமஞ்சரி said...

கனக்கும் மனதின் கவி வெளிப்பாடு மிக நன்று ஹேமா. ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலிக்கும் துயரம் மனத்தைக் கலங்கடிக்கிறது.

http://rajavani.blogspot.com/ said...

.............உம்.........

ராமலக்ஷ்மி said...

காலம் ஆற்ற முடியாத வலி:(!

Rathnavel Natarajan said...

வேதனையாக இருக்கிறது.

ஈரோடு கதிர் said...

என்ன சொல்ல! :(

போளூர் தயாநிதி said...

மன்னிக்கவியலாத கொடுங்குற்றம்...
அரச பயங்கரவாதங்களின்
கொடுமை ...
யாரிந்த கொடுங்கோலன்
விடியலில் குறுக்கீடுகள் ஏன்
அடக்கு முறைகளின்
அணிவகுப்பு
வீர்களின் ஈகம்
வென்றெடுக்கும்
தனிஈழம்
தமிழீழம் ...

ம.தி.சுதா said...

அக்கா மன்னியுங்கள் கருத்திட முடியல...

ம.தி.சுதா said...

முதல் கருத்தே நான் அடிக்க வந்த கருத்தை மறங்கடிச்சிட்டுது யாருக்குமே நாங்கள் நிம்மதியாக வாழ்வது பிடிக்குதில்லை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உயிர் மூச்சோடு
மண்ணுக்குள் மூடினாலும்
இழுத்து முடித்த இறுதி மூச்சு
தாய் மண்ணில்.

kaanner maddume emaku michcham.

Post a Comment