*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, August 08, 2013

காதல் துளிகள் (8)


எத்தனை போர்களைக் கண்டது
இந்த உயிர்
காப்பாற்றிய உயிர்களும் எத்தனை
காலில் விழுந்த உயிர்கள் எத்தனை
என் உயிர் பற்றிய கவலை
எப்போதுமில்லை
வா...வா.....
தொடை தட்டும்
தைரியத்தோடு வா
என் தோள் தொடு
பாவமும் புண்ணியமும்
எதுவும் யோசிக்க நேரமில்லை
சிந்திக்கும் நேரங்கள் சிறகடிக்க
வாள் எடு
எதிர் கொள் என்னை
உன் உயிரை
எடுத்தே ஆகவேண்டும்
இப்போ நான்!!!


போர்க்காலங்களில்
முகடு கடக்கும்
சில வகிடு பிரிக்காத
பெரும் பறவைகளில்
உன் முகம்
கண்டிருக்கிறேன்
பின்நாளில்
ஒரு வீரனாய்
மறைத்த முகிலுக்குள்.

அதே கற்பனை முகம்
இப்போதும்.....
இனியும் காணவேண்டாம்
போதும்
அப்படியே இருந்துகொள் !!!


இடைவெளி குறைந்த
கவிதை இது
வயதின் எல்லை
தாண்டியவர்களுக்கு மட்டுமே...

இரும்புப் பிடியில்
மந்திரித்த ஏதோ ஒன்றாய்
இருட்டுச் சிலைகள் நகர
வெப்பம் தாளாமல்
யன்னல் சீலைகளும் உருக
நழுவிய சேலை தேடாமல்
தேக்கு மரக் கட்டில்
தவிர்த்த அவள்
மார்பணைத்த
அவன் தோள்களில்!!!


நினைவுகளின்
ஒவ்வொரு அடுக்கிலும்
ஒளித்துக்கொண்டே
கண்டு பிடிக்கும் விரல்களை
ஏய்த்தபடியே கேட்கிறாய்

என்னை நினைவிருக்கா
நான் யாரென்று
சொல் நான் யாரென்று.....

கேள்வியா இல்லை
கேலியா இது.

நினைவுகளுக்கு நீரிடும்
என் தோட்டக்காரா
உயிர் வேர்
இழுத்தொரு பரீட்சை
ஏனுனக்கு !?


பச்சையும்
மஞ்சளும்
சிவப்புமாக
சமிக்ஞை
காட்டிக்கொண்டிருக்கிறது
உன் இருப்பு.

எப்படியிருக்கிறாய்
இரவிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நீ சூரியன் என்பதையும்
மறந்து.

சொல்லிப்போன
வாசங்களின் வீரியம்
குறைந்துகொண்டே வருகிறது
ஒரு சூரிய மோதிரம்
தந்து போயிருக்கலாம் நீ!

4 comments:

தனிமரம் said...

ஆஹா ஒரு மோதிரம் சரி தரக்கூட முடியாதளவு ஏதிலியோ போர் வீரன்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ!

தனிமரம் said...

கவிதையின் பாடு பொருள் ரசித்தேன்.

Unknown said...

"இரவிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நீ சூரியன் என்பதையும்
மறந்து"

"ஒரு சூரிய மோதிரம்
தந்து போயிருக்கலாம் நீ!"

மிக ஆழமான வரிகள்!
பாராட்டுக்கள்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை வரிகள் அருமை....

Post a Comment