எனக்கான நேரமிது....
வேலி நுழையும்
நரியும் கழுகும்
தனலேந்தி நிற்கிறேன்
என் தாய் கொஞ்சம்
கண் அசரட்டும் .
மின்மினி விளக்கோடும்
துப்பாக்கியோடும்
காத்திருக்கிறது எனக்கான சாவு
இறக்காத உணர்வோடு
மீட்சி பிறக்கிறது உறுதி.
வரட்டும்.....
இன்னொருமுறை வரட்டும்
எங்கள் பெண்புரசுகள் ஒதுங்கிய
வேலி பிச்சு
கதவுடைச்சு அடுப்பெரிச்ச
சப்பாத்து நாய்கள் வரட்டும்.
வளவு நிறைச்ச மரங்கள் வெட்டி
வானளாவி வண்ணம் தந்த
பனை தென்னை கழுத்துடைச்சு
தெருவுக்குக் குறுக்க போட்ட
பிசாசுகள் வரட்டும்.
புதைகுழிக்குள்
பதுங்கி அடங்கப் பிறக்கவில்லை
போதைதரும் பெண்களல்ல நாங்கள்
போதையைப் போக்காட்டும்
அண்ணனின் பெண்புலிகள்.
வயிறுடைத்த குருதியோடு
மாற்றுடை மாற்ற நேரமின்றி
தூக்கத்தை தூக்கிலிட்டு
காத்திருக்கிறேன்
எனைத்தாண்டும் கழுகுக்காய்.
வரட்டும் வரட்டும்
உக்கிய மண்டை ஓடுகளோடு
உக்காது உண்மைகளும்
வரட்டும் வட்டும்
எமக்கான காலம் வரட்டும்!!!
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில்.....ஒரு நினைவுப்பதிவு.
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
7 comments:
புதைகுழிக்குள்
பதுங்கி அடங்கப் பிறக்கவில்லை
போதைதரும் பெண்களல்ல நாங்கள்
போதையைப் போக்காட்டும்
அண்ணனின் பெண்புலிகள்.//
நீறு பூத்த நெருப்பை சாம்பல் எனக் கொள்பவன்
நிச்சயம் முட்டாளாகத்தான் இருக்கமுடியும்
tha.ma 1
வரட்டும் வரட்டும் .
பதுங்கி அடங்கப் பிறக்கவில்லை
போதைதரும் பெண்களல்ல //
கையில் குவளை ஏந்தி
போதையைக் கண்களில்
தழும்பித் தரும்
பெண்ணினமல்ல நாங்கள்..
வேட்டையாட வந்த
புழுதிகளை
புரட்டிப்போட வந்த
காட்டாற்று வெள்ளம் நாங்கள்...
வரட்டும் வரட்டும்
அந்த பொன்னாள் ....
வீரமிகு வரிகள்...
பெண்களுக்குப் பொருத்தமானது
புதைகுழிக்குள்
பதுங்கி அடங்கப் பிறக்கவில்லை
போதைதரும் பெண்களல்ல நாங்கள்
போதையைப் போக்காட்டும்
அண்ணனின் பெண்புலிகள்.
-------------
வீரமிகும் வரிகள்... வரிக்கு வரி எழுச்சி...
Post a Comment