கூரை பிய்வதாய் ஒரு கனவு...வீட்டுத் தலைவனுக்குக் கூடாது
இது அம்மம்மா...
நாட்டுக்குத் தீங்கு
இது பெரியண்ணா...
பணம் கொட்டப்போகுது
இது தங்கை...
பேசிவைத்த திருமணமோ
இது அக்கா...
இருப்பிடப் பிரச்சனை
பல்லிக்கும் பாம்பிற்கும்...
அடுத்தநாள் கனவில் கடவுள்
எல்லாம் நல்லது
எல்லாமே நடக்குமென்றார்...
எது முதலில்
அக்காவினதா அப்பாவினதா
இருந்த நின்மதிக்குத்தான்
கால் முளைத்தது
தினம் தினம்...
கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!
உப்புமடச் சந்தியில்...."பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும்."
ஹேமா(சுவிஸ்)






