*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 02, 2013

துரோக அறிவிப்பொன்று...


மிகச்சிறந்த போராளியின்
கைகளைகளைக்
கட்டிக் கொன்றவர்களின்
அரசியலில் எழுதி
அழிக்கப்படுகிறது
ஆயுதமற்ற காதல்.

சாதியற்ற பிரியங்களைத்
தாரை வார்க்கும்
ஆகாசவாணிகள்
வியர்க்கும்
உவர்ப்புநீரில்
இரு உயிர்களின் மிதப்பு.

இணைந்த மனங்கள்
இச்சைகள் பிழிய
ஆட்டு(ம்)ப்பலகை
அவிழ்த்தெடுக்கும்
வன்மங்கள் சில.

அன்பெனப் பொய்சொல்லி
குவளை நிரப்பும்
போலிக்கடவுள்
புழுக்கொல்லிப்
பூண்டுகளையும் கலந்து
கொடுத்துக் காத்திருக்கும்
வார்த்தைகளினூடே
வழிந்துவிடாமல்.

மூளைச் சலவை செய்தவளிடம்
தோற்ற ஆத்மா
குப்புற விழுந்து
விழிகளால் மண் தோண்டி
விசாரித்துக்கொண்டிருக்கிறது
நியாயங்களை.

முதுகில் பதுங்கும் ஆயுதம்
சாதியக் குருதிகளில்
பிரியங்களைப் பிரித்து
சேமித்துக்கொண்டிருக்கும்
பரம்பரைக் கலயங்களில்.

காதல் வாழ்வதும் இறப்பதும்
சமூகக் கொடிகளிலென
ஆதாரங்களை
ஏந்திக்கொண்டிருக்கிறது
அப்போரளியின் அழகு முகம்!!!

ஹேமா(சுவிஸ்)

ஆட்டுப்பலகை - செக்கின் கீழ்ப்பக்கத்தில் மாடுகள் இணைக்கப்பட்டுச் சுற்றி வரும் மரம்.

11 comments:

கோவை நேரம் said...

டெம்பளேட் மாத்துங்கள்...கண்ணைப்பறிக்கிறது...
கவிதை நன்று,,,

இளமதி said...

கவியின் தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்கள்...
துரோகம் எத்தகையது என்று!..

என்றுதான் இந்தச் சாபம் எமக்குத் தீருமோ...

த ம.1

கவியாழி said...

அன்பெனப் பொய்சொல்லி
குவளை நிரப்பும்
போலிக்கடவுள்// உண்மைதான் நடிப்பு

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை.... தலைப்பும்...

ம.தி.சுதா said...

அவர் அவர் மனங்களுக்கு அருகில் சென்றால் தானக்க உண்மை தெரியும் ஊடகங்களை வைத்து எதையும் முடிவெடுக்காதீர்கள்

MANO நாஞ்சில் மனோ said...

தேன் கலந்து அன்பாக பேசுபவர்களை நம்பாதே.....எதையும் கொஞ்சம் கடினமாக பேசுபவர்களை தாராளமாக நம்பலாம் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்வார்.

உங்க கவிதை எங்க அப்பாவை நியாபகப் படுத்துகிறது....!

கீதமஞ்சரி said...

\\முதுகில் பதுங்கும் ஆயுதம்
சாதியக் குருதிகளில்
பிரியங்களைப் பிரித்து
சேமித்துக்கொண்டிருக்கும்
பரம்பரைக் கலயங்களில்.\\

சாதீய உணர்வில் சிக்கி சந்ததிகளை சதியால் வீழ்த்தும் சமுதாயத்தில் சுயமாய் மனங்கள் மாறாதவரை என்றுமே நிறையப்போவதில்லை பரம்பரைக் கலயங்கள்.

நெகிழ்த்தும் வரிகளும் வரிகளினுள்ளாடும் உணர்வுக்கோவையும் நெஞ்சாழம் பாய்கின்றன ஹேமா.

சசிகலா said...

அன்பெனப் பொய்சொல்லி
குவளை நிரப்பும்
போலிக்கடவுள்...கடவுள் சாதி என்கிற பெயரில் நிகழும் அவலங்கள். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இவையும்.

தனிமரம் said...

ம்ம் என்ன சொல்வது ஒவ்வொருத்தரின் பார்வையும் பல வண்ணம் அரசியல் போல ஆத்மா தேடலிலும் ! அருமையான கவிதை.

வெற்றிவேல் said...

அழகான கவிதை....

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

Post a Comment