*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, August 30, 2013

கோடு...


சின்னக் கோடு
அருகில்
பெரிய கோடென
கோடுகளின் தத்துவத்தைக்
கீறிக் காட்டிக்கொண்டிருந்தாய்
நீயே...வியப்புக்குறியாக.

முன்னமே திட்டமிட்டிருப்பாய்
கோடுகளின் அளவை
அல்லது இருத்தலை
நிர்ணயிப்பது நீயென.

இப்போ....
சின்னக் கோடு
புள்ளியென
ஒழிந்து கொண்டிருப்பதின்
அதிசயத்தையும்  மகிழ்வோடு
வரையத் தொடங்கியிருப்பாய்.

நறும்புகை மூச்சு முட்ட
ஆனந்தக் கண்ணீரோடு
அன்பின் கடவுள்!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் ஹேம்ஸ்..

ஸ்ரீராம். said...

அன்பின் கடவுள். அட! அன்பே கடவுள் இல்லையோ!

K said...

கோடுகளுக்கு நிரந்தர உருவம் இல்லை அவை சிறிதாவதும் பெரிதாவதும், அன்பின் நிமித்தமாய் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன கவிதை சூப்பர் ஹேமா

தனிமரம் said...

கோடு நாம் போடுவது!ம்ம் அருமை கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

நறும்புகை மூச்சு முட்ட
ஆனந்தக் கண்ணீரோடு
அன்பின் கடவுள்!!!

அருமை..!

கவியாழி said...

அருமை.எல்லாமே இயல்பாய் அமைந்தால் சிறப்பாய் இருக்கும்

விச்சு said...

கோடுகளில்கூட தத்துவம் உள்ளதா..! தூரத்தில் இருந்து பார்த்தால் புள்ளிதான். புரிந்துகொண்டால் அன்பின் ஆழம் புரியும்.

'பரிவை' சே.குமார் said...

அசத்தலான கவிதை....
வாழ்த்துக்கள் சகோதரி.

manichudar blogspot.com said...

நிர்ணயிக்கிற கோடுகள் புள்ளிகள் சேர்ந்தது தானே.நம்புகிற நமக்கு அன்பின் கடவுளாக நினைத்துக் கொண்டுவிடுகிறோம் !

மாதேவி said...

நறும்புகை மூச்சு முட்ட
ஆனந்தக் கண்ணீரோடு
அன்பின் கடவுள்!!!

அசத்தல் . வாழ்த்துகள் ஹேமா.

Post a Comment