*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, September 03, 2012

அழைப்...பூ !


தள்ளிக்கொண்டேயிருக்கிற
மனதையும்
நெருங்கிக்கொண்டேயிருக்கிற
என்னையும்
அதட்டிக்கொண்டே
இதை எழுதுகிறேன்.

நான் ஆறிய
ஆடிய மகிழமரம் நீ...
வார்த்தைப் பூக்களைப்
பரப்பிவிட்டு
பிடித்தவற்றைப்
பொறுக்கியெடுவெனச்
சாபமிடுகிறாய்.

குழந்தைகளாய்
அள்ளியெடுக்கிறேன்
நீ தந்தது
நான் தந்தது
இதில்...
எதை விட
எதை அணைக்க.

நம் எண்ணங்கள் கருவுற
பெற்ற குழந்தைகளை
வளர்க்க
என்னிடமே தந்திருக்கிறாய்.

நீ தந்த
வார்த்தை வாரிசுகளை
என்னோடு கட்டியணைக்க
ஒருமுறை...
ஒரே ஒருமுறை வா
வந்துவிடு
இன்னும்....
கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
அந்த வாய்ப்பும் உனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

40 comments:

அப்பாதுரை said...

செயலில் காட்டச் சொல்லும் காதலுக்கு மதிப்பே தனி.

MARI The Great said...

//நான் ஆறிய
ஆடிய மகிழமரம் நீ..//

அருமையான வரிகள் சகோ, நல்ல சிந்தனையும் கூட!

கடைசிவரிகள் கவிதையில் முத்தாய்ப்பு!

Admin said...

இதில்...
எதை விட
எதை பாராட்ட?

நேசமித்ரன் said...

காதலின் மன்றாட்டு, கழுமரத்தின் கீழ் முளைத்த புல்வெளி வண்ணத்துப் பூச்சிகளின் மொழியில்

Yaathoramani.blogspot.com said...

நம் எண்ணங்கள் கருவுற
பெற்ற குழந்தைகளை
வளர்க்க
என்னிடமே தந்திருக்கிறாய்.//

அருமை அருமை
கவிதை மனம் தடவிச் செல்லும்
இனிய தென்றலாய்...
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Seeni said...

azhakiya kavi!

ஆத்மா said...

நீ தந்த
வார்த்தை வாரிசுகளை
///////////////////////////////////

அழகான செதுக்கல்கள்....

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை... வாழ்த்துக்கள்...

கவி அழகன் said...

Itho vanthuvidden

Kanchana Radhakrishnan said...

//வா
வந்துவிடு
இன்னும்....
கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
அந்த வாய்ப்பும் உனக்கு!!!//

:))

Unknown said...


நீண்ட இடை வெளி!வெளிநாட்டுப் பயணம், பதிவர் திருவிழா!என பலவகைக் கரணங்கள்! யாருடைய வலைவழியும் வர இயலவில்லை
வழக்கம் போல் கவிதை அருமை! ஆனால்

// நான் ஆறிய
ஆடிய மகிழமரம் நீ...
வார்த்தைப் பூக்களைப்//

இதில் ஆறிய என்ற சொல்லுக்கு வேறு ஏதேனும் பொருள் உண்டா..?
விளக்கினால் நன்று! நன்றி!

சின்னப்பயல் said...

வார்த்தைப் பூக்களைப்
பரப்பிவிட்டு
பிடித்தவற்றைப்
பொறுக்கியெடுவெனச்
சாபமிடுகிறாய்.

sathishsangkavi.blogspot.com said...

/நீ தந்த
வார்த்தை வாரிசுகளை
என்னோடு கட்டியணைக்க
ஒருமுறை...
ஒரே ஒருமுறை வா
வந்துவிடு
இன்னும்....//

அழகு...

Best Business Brands said...

குழந்தைகளாய் அள்ளியெடுக்கிறேன் நீ தந்தது நான் தந்தது இதில்... எதை விட எதை அணைக்க.

vimalanperali said...

தள்ளிக்கொண்டே இருக்கிற மனதையும் நெருங்கிக்கொண்டே இருக்கிற என்னையும் ஏன் அதட்டவேண்டும்?

ஸ்ரீராம். said...

அருமை ஹேமா.

குட்டன்ஜி said...

சிறப்பாக இருக்கிறது

குட்டன்ஜி said...

t.m.9

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இயல்பான வரிகள்.

ராஜ நடராஜன் said...

ஹேமா!எனக்கு தெரிந்ததெல்லாம் மார்கழியில் வீட்டின் முன்னால் மலர் பறித்த பெண்களே:)

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் ஹேம்ஸ்..

”தளிர் சுரேஷ்” said...

காதல் ரசம் பொங்கும் கவிதை! அருமை!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி7
http://thalirssb.blogspot.in/2012/09/7.html

SELECTED ME said...

எதை விட
எதை அணைக்க.//// சூப்பர்

உழவன் said...

அழகிய வரிகள்..

கீதமஞ்சரி said...

உதிர்த்த வார்த்தைப்பூக்களைப் பொறுக்கச் சொல்லி சாபமிட்ட மகிழமரம் சாபத்துக்கு பதில் வரமளித்திருக்கக் கூடாதா? பார், அதனால்தானோ என்னவோ, வார்த்தைப் பிள்ளைகளைத் தாயோடு கட்டியணைக்கக் காலக்கெடு கொடுத்தாகிவிட்டது... இனி என்ன செய்ய? துரிதமாய் செயல்படு மனமே... அழகு கவிதை ஹேமா.. பாராட்டுகள்.

வெற்றிவேல் said...

அழகு கவிதை ஹேமா...
வழக்கம்போல்...
ஆறிய என்பதை விளக்குங்களேன்...

ராமலக்ஷ்மி said...

அழகிய கவிதை ஹேமா.

விச்சு said...

தள்ளிக்கொண்டேயிருக்கிற
மனதையும்
நெருங்கிக்கொண்டேயிருக்கிற
என்னையும்...
அசத்திட்டீங்க ஹேமா.

அருணா செல்வம் said...

என் இனிய தொழி ஹேமா
“வார்த்தை வாரிசுகளைக் கட்டியணைக்க“ - முடியாது எனத்தெரிந்தும் அழகாக அழைப்பு விடுத்துள்ளீர்கள்.

அருமையான கவிதை தோழி.

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

தங்கள் மின்வலையை இன்றுதான் படித்தேன்
திங்களைப் போன்று கருத்துக்கள் ஒளிர்ந்தன
வாழ்த்துக்கள்

அழைப்..பூப் கவிதை மிகஅருமை!
கவிஞா் ஏமா சொல்இனிமை!
மழை..பூ போன்ற தமிழ்ப்பொழிவில்
மனப்பூ குளிரும்! மகிழ்ந்தாடும்!
இழைப்..பூ வேலை! பலவண்ணம்!
இணைப்பு கொடுக்கும் நெஞ்நத்துள்!
பிழைப்..பூ இன்றிக் கவிபாடும்
பிழைப்பு வளர வாழ்த்துகிறேன்!

கவிஞா் கி.பாரதிதாசன்
http://bharathidasanfrance.blogspot.fr/
kambane2007@yahoo.fr


அன்பு உள்ளம் said...

ஆழமான அன்பின் வெளிப்பாடு ஓர் அழகிய கவிதையாக இங்கே அருமை !!!!!......வாழ்த்துக்கள் தோழி .

செய்தாலி said...

அழகிய உணர்வுகள்
லலிதமான வார்த்தைக் கோர்வைகள்
எப்போது வாசித்தல் லயித்து விடுகிறது மனது

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் தோழி அருமையான கவிதை
வரிகளிற்கு !..இன்று என் தளத்தில் நான் வெளியிட்டுள்ள என் பாடலுக்கு உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன் சகோ .

'பரிவை' சே.குமார் said...

அருமையான...
அழகான...
கவிதை
வாழ்த்துக்கள் சகோதரி.

தனிமரம் said...

பூவின் அழகில் எதை தவிர்க்க எதைவிட எதை அணைக்க அருமை உவமை!

தனிமரம் said...

ஒரே ஒருமுறை வா
வந்துவிடு
இன்னும்....
கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
அந்த வாய்ப்பும் உனக்கு!!!//ம்ம் காதலுக்கும் பொருந்துமோ பூவின் அழைப்பு!ம்ம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பல்வேறு சூழல்களை எடுத்துக்கொள்ளத் தோன்றுமாறு அமைந்திருக்கிறது கவிதை.வார்த்தைப் பிரயோகம் அருமை.

மின் வாசகம் said...

சூழல்கள் மாறினாலும் நாம் பரிச்சயப்பட்ட இடங்கள் மீதான அன்பும்,

ஐம்புலன்களால் தீண்டப்பட்ட மண்ணின் வாசம் மாறிவிடுவதில்லை.

பூவின் மீதான காதல் வரிகளில் தெறிக்கின்றன.

கவிதை மிக அருமை சகோதரி !

ஹேமா said...

நான் ஆறிய
ஆடிய மகிழமரம் நீ......

ஆறிய....இளைப்பாறிய....

என்னை ஆற்றிய....

ஆறு...அடங்குதல்,தணித்தல் என்றும் சேர்த்துக்கொள்ளமுடியும் !

Bibiliobibuli said...

ஹேமா, கவிதையின் சோகம் தாக்குது. வெறென்ன சொல்ல!

Post a Comment