*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 07, 2012

இயல்பு மாறாதவைகள்...

நிபந்தனைகளற்று
மூடித் திறக்கும் எண்ணங்கள் சில
நிரந்தர நெருப்பின் நிறமாய்
சிவப்பும் மஞ்சளும் கலந்து.

உருமாறும் இரும்பை
உருக்கும்போதும் சரி
கொழுந்து விட்டெரியும்
கூரையிலும் சரி
நிராகரிக்கும் வார்த்தைகள்
துரத்தியடிக்கும் துரோகம்
துருத்தி எரிக்கும்போதும் சரி
நெருப்பு நிறம் மாற்றாது.

தன்னை பொசுக்கும்
உலோக நெருப்பின் நிறமறியாது
முகம் மூடப்பட்ட பிரேதம்
நிறமறியாமலும்
நிறமற்றிருப்பதும் நல்லது
வெண்ணிற ஆன்மாபோல்
பொதுவாக!!!

ஹேமா(சுவிஸ்)

32 comments:

அம்பாளடியாள் said...

தன்னை பொசுக்கும்
உலோக நெருப்பின் நிறமறியாது
முகம் மூடப்பட்ட பிரேதம்
நிறமறியாமலும்
நிறமற்றிருப்பதும் நல்லது
வெண்ணிற ஆன்மாபோல்
பொதுவாக!!!

மிக அழகாக சொன்னீர்கள் சகோ !!!!.
தொடர வாழ்த்துக்கள் .

Yoga.S. said...

ஹைய்!நான் தான் முதல்,ஹ!ஹ!ஹா!!!!!!!!அருமையான கவிதை,ஹேமா!தீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஹேமா said...

அப்பா......சந்தோஷம் !

பால கணேஷ் said...

இயல்பில் மாறாததைக் கவிதையில் பதிவு செய்த விதம் அருமை. மிக ரசித்தேன்.

கவி அழகன் said...

Iyako accachi
Kavithaiyai vassikka musuyavillai enathu kaiyadakka tholai pesiyil

Oru eluththum vara villai

நிலாமகள் said...


நிராகரிக்கும் வார்த்தைகள்
துரத்தியடிக்கும் துரோகம்//

முக‌ம் மூடிய‌ பிரேத‌மாய் உயிர் வாழ்த‌லில் ப‌ல‌நேர‌ம் நாம்...

வரலாற்று சுவடுகள் said...

//தன்னை பொசுக்கும்
உலோக நெருப்பின் நிறமறியாது
முகம் மூடப்பட்ட பிரேதம்
நிறமறியாமலும்
நிறமற்றிருப்பதும் நல்லது
வெண்ணிற ஆன்மாபோல்//

நல்ல சிந்தனை..!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

விச்சு said...

நெருப்பின் நிறம் என்றும் ஒன்றுபோல்தான்... வழக்கம்போல கலக்கல் கவிதை ஹேமா.(பத்துமுறை வாசித்துவிட்டேன்... புரிந்துகொள்ள சிரமம் இருப்பதால்)

s suresh said...

நெருப்பையும் இயல்பையும் ஓப்பிட்டு கவிதை படைத்த விதம் சிறப்பு! நன்றி!

இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

AROUNA SELVAME said...

இயல்பில் மாறுவது
மனித மனம் மட்டும் தான் என்பதை
எதிர்மறையாக அழகாக
உணர்த்தியுள்ளீர்கள் என் இனிய தோழி ஹேமா.

(அப்பாடா... முதன் முதலாக ஒரே ஒரு முறை படித்து உங்கள் கவிதையைப் புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். கொஞ்சம் எனக்கும் அறிவு வளர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். உண்மைதானே...)

Ramani said...


வித்தியாசமான அருமையான ஒப்பீடு
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

thendralsaravanan said...

ஹேமா!!!உண்மையிலேயே தமிழ் இனிமைதான்...எளிதான மொழிதானா.......??!!!தட்டுத்தடுமாறி புரிந்து கொள்கிறேன்....ம்ம்ம்...இன்னும் நா வளரனுமோ!

சிட்டுக்குருவி said...

மறுபடியும் புரியாததா........?
முயற்சிக்கிறேன் பல முறை படித்து ரசிக்க ...

திண்டுக்கல் தனபாலன் said...

சொற்களை கையாட விதம் அருமை...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை ஹேமா.

தனிமரம் said...

கொழுந்து விட்டு எரியும் தீக்கு /ம்ம் அருமையான வரிகள் கவிதாயினி!

அம்பாளடியாள் said...

சகோ ஒரு முக்கியமான தகவலை தங்களிடம்
அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஆதலால்
தங்கள் கருத்துப் பெட்டியை ஒருமுறை Enable
செய்வீர்களா ?....பிளீஸ்

அம்பாளடியாள் said...

சகோ நீங்கள் கலாநிகேதன் நாட்டியால நிகழ்வு ஒன்றின்போது இசைத்தட்டு ஒன்று வெயிட்டு இருந்தீர்களா ?.......2010 ல் இதில்
ஒரு பாடலுக்கு அந்த நாட்டியாலைய மாணவிகள் நடனம்கூட ஆடினார்கள் .வருகின்ற பத்தாம் மாசம் அந்த நாட்டியாலயம் அமைந்துள்ள இடத்தில் இன்னும் ஒரு சிறப்பு நிகழ்வு நடக்க இருக்கின்றது
பல பதிவர்கள் சென்னையில் சந்திக்க வாய்ப்பை உருவாக்கினார்கள் அதுபோன்று ஒரு வாய்ப்பு இந்த நிகழ்வில் பங்குகொள்ளும்போது எமக்கும் கிட்டுமே என ஓர் சிந்தனை மனதில் உள்ளது .இது விசயமாய்
பேசவே ஆவலுடன் உள்ளேன் .தங்களுக்கும் விருப்பம் இருந்தால்
முயற்சியுங்கள் சகோ .

ஸ்ரீராம். said...

தன்னை பாதிக்கும் நிகழ்வுகள் யாவற்றிலும் பற்றற்று பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறதோ கவிதை? அருமை ஹேமா!

குட்டன் said...

நீங்கள் எழுதுவதெல்லாம் இந்தச் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை! எரிக்கப்படும் பொருள் மாறும்,ஆனால் எரிக்கும் நெருப்பு மாறாதுதான்.
சிறப்பு
த,ம11

இரவின் புன்னகை said...

உருமாறும் இரும்பை
உருக்கும்போதும் சரி
கொழுந்து விட்டெரியும்
கூரையிலும் சரி
நிராகரிக்கும் வார்த்தைகள்
துரத்தியடிக்கும் துரோகம்
துருத்தி எரிக்கும்போதும் சரி
நெருப்பு நிறம் மாற்றாது.

அருமை...

விமலன் said...

எண்ணங்கள் நீராய்,நெருப்பாய்,காற்றாய் மின்னலாய் இன்னும் எதுவாகவும் உருமாறுகிற சக்திகொண்டவையாய்/

T.N.MURALIDHARAN said...

ஒவ்வொன்றும் தன் இயல்பிலிருந்து மாறாமல் இருப்பது சில நேரங்களில் நன்மையையும் சில நேரங்களில் தீமையும் தருகிறது.
உங்கள கவிதைகளும் இயல்பு மாராதவியாக அழகாக மிளிர்கின்றன
த்.ம.12

அம்பாளடியாள் said...

மிக்க நன்றி சகோதரி என் கேள்விக்கு அன்போடு தாங்கள் பகிர்ந்துகொண்ட பதிலுக்கு .

சே. குமார் said...

வித்தியாசமான கவிதை...

Rathi said...

கவிதை படித்ததும் நெருப்பு போல இருக்க இன்னும் ஆர்வம் கூடுது, ஹேமா. கவிதை நான் பாராட்டினால் பொருத்தமா இருக்காது :)

மோகன்ஜி said...

ஹேமா! பல சாத்தியங்களை மனதில் தோற்றுவிக்கும் வரிகள்..

//நிறமறியாமலும்
நிறமற்றிருப்பதும் நல்லது// சித்தர் யாரோ சிரிப்பது போல் எனக்கு பட்டது...

என் அன்பு.

Sasi Kala said...

ஆன்மாவின் நிறத்தை வெளிக்கொணரும் வரிகள்.

நெற்கொழுதாசன் said...

யோசிக்க வைக்கிறது கவிதை ............................

Asiya Omar said...

தத்துவக்கவிதை அருமை.

Seeni said...சகோ!
மிக்க
நன்றி!

அழகான வாழ்வில் முக்கியமான விஷயங்கள் சொன்னீங்க...

Post a Comment