*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, August 30, 2012

வித்தை கற்றவளின் கனவு...

கனவுகள் போர்த்திய பகல்
குறைந்த வெளிச்ச இரவு
வகிடெடுத்து
வளைந்த தேவதையாய்
என்றும்
வாயில் சின்னப்புன்னகை கீறி
பூக்களையே பாரமென்று
சுமக்கும் பாவைச்சித்திரம்.

நாடு வீடு
நகரும் நகரம்
நரகமாகும் கனவு
சுற்றுச் சுழல் காற்றில்
நாற்றமடிக்கும் சமூகம்
உடைந்த மனத் துகள்களில்
எண்ணங்களை கிறுக்கும் அவளுக்கு
வெற்றுச் சோற்றுக் கோப்பையாய்
அச்சித்திரம்
பாவங்களை கண்ணோடு நிறுத்தியபடி.

கல்வி மறுத்து
தனிமை வெறுத்து
காதலித்த காதலையே கொன்று
தனக்குத்தானே
சிம்னி விளக்கில்
சவப்பெட்டி செய்து
படுத்துக்கொள்ளும் அவளை
இழுத்து வைத்து மூடி
ஆணியடிக்கும் பல கைகள்.

அதே குறைந்த வெளிச்ச இரவு
வகிடு வளைந்த புன்னகையோடு
இன்னும் சித்திரம் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)

29 comments:

ராமலக்ஷ்மி said...

/கனவுகள் போர்த்திய பகல்
குறைந்த வெளிச்ச இரவு
வகிடெடுத்து
வளைந்த தேவதையாய்
என்றும்
வாயில் சின்னப்புன்னகை கீறி/

கவிதையும் அழகு. தேர்ந்தெடுத்த படமும் அழகு.

Yaathoramani.blogspot.com said...

அதே குறைந்த வெளிச்ச இரவு
வகிடு வளைந்த புன்னகையோடு
இன்னும் சித்திரம் அப்படியே!!!//

ஒரு பதிவாவது இப்படி நேரடியாக
நெஞ்சைத் துளைக்கும்படித் தர
எனக்கும் அதிக ஆசை உள்ளது
வார்த்தைகள் தான் தங்களுக்கு
வசப்படுவதுபோல் எனக்கு
வசப்பட மறுக்கிறது
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... அருமை... நன்றி... (3)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தை கற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது கொடுமைதான். அழகாகச் சொல்லும் நல்ல கவி(த்)தை.

ப்ரியமுடன் வசந்த் said...

பசித்தவனின் கனவு

பசியை போர்த்திய வயிறு
குறைந்த வெளிச்ச இரவு
வட்டமாய்
வளைந்த பித்தளைதட்டு
என்றும்
வாயில் சின்னக்கீறல்
சாப்பாட்டையே பாரமென்று
சுமக்கும் சாப்பாட்டுப்பாத்திரம்

நாறும் வீடு
நுகரும் மூக்கு
நரகமாகும் பசி
சுற்றுச் சுழல் காற்றில்
நாற்றமடிக்கும் சாப்பாடு
உடைந்த சாப்பாட்டுத்தட்டில்
பழசைப்போடும் அவனுக்கு
வெற்று போதை கோப்பையாய்
அப்பாத்திரம்
பசியில் கண்ணைக்கட்டியபடி

பழசை மறுத்தவனிடம்
ருசியை மறைத்து
பசித்த வயிற்றைக்கொன்று
தனக்குத்தானே
சிம்னி விளக்கில்
குப்பைத்தொட்டி செய்து
வீழ்ந்து கிடக்கும் பழசை
எடுத்து வந்து
சாப்பிடும் பல காக்கைகள்

அதே குறைந்த வெளிச்ச இரவு
வட்டமாய்
வளைந்த பித்தளைதட்டு சின்ன்க்கீறலோடு
இன்னும் சாப்பாட்டுப் பாத்திரம் அப்படியே

வசந்த் (இந்தியா)

ஹேமா said...

எனக்கான கொமண்டுகள் என் மெயிலுக்கு வருது.கவிதைக்குக் கீழ காணோம்.என்னாச்சு...!

Angel said...

//வெற்றுச் சோற்றுக் கோப்பையாய்
அச்சித்திரம்
பாவங்களை கண்ணோடு நிறுத்தியபடி.//
கையறு நிலையில் சித்திரம்
கவிதை அருமை ..

டாஷ் போர்ட் செட்டிங்க்சை செக் பண்ணுங்க ஹேமா

ஹேமா said...

இல்லையே ஏஞ்சல்.....இப்ப நீங்க போட்டது வந்திருக்கே.உங்களுக்கு முன் போட்ட ராமலஷ்மி அக்கா,ரமணி ஐயா,ப்ரியமுடன் வசந்த் போட்டது வரேல்லையே !

Unknown said...

நன்றாக உள்ளது சகோ! கவிதை... தொடருங்கள்

MARI The Great said...

//
ஹேமா said...
இல்லையே ஏஞ்சல்.....இப்ப நீங்க போட்டது வந்திருக்கே.உங்களுக்கு முன் போட்ட ராமலஷ்மி அக்கா,ரமணி ஐயா,ப்ரியமுடன் வசந்த் போட்டது வரேல்லையே !
//

ஸ்பாம் பாக்ஸில் இருக்கிறதா என்று பாருங்கள் சகோ!

ஹேமா said...

நன்றி வரலாற்றுச் சுவடுகள்.உங்கள் கொமண்ட் பார்த்தபிறகுதான் ஸ்பாம் போய் பார்த்து முயற்சித்தேன்.வந்துவிட்டது.இதுபோல முன் எப்போதும் ஆனதில்லை.நன்றி மீண்டும் !

ஆத்மா said...

கல்வி மறுத்து
தனிமை வெறுத்து
காதலித்த காதலையே கொன்று
தனக்குத்தானே
சிம்னி விளக்கில்
சவப்பெட்டி செய்து
படுத்துக்கொள்ளும் அவளை
இழுத்து வைத்து மூடி
ஆணியடிக்கும் பல கைகள்.
////////////////////////////////////////

ஆஹா என்னா வரிகள் என்ன ஒரு கற்பனை அற்புதம்

இந்திரா said...

//சிம்னி விளக்கில்
சவப்பெட்டி செய்து
படுத்துக்கொள்ளும் அவளை
இழுத்து வைத்து மூடி
ஆணியடிக்கும் பல கைகள்.//

அருமையான வரிகள்..

துரைடேனியல் said...

மலரும் நினைவுகளா ஹேமா?!அருமை.

arasan said...

சுற்றுச் சுழல் காற்றில்
நாற்றமடிக்கும் சமூகம்
உடைந்த மனத் துகள்களில்
எண்ணங்களை கிறுக்கும் அவளுக்கு
வெற்றுச் சோற்றுக் கோப்பையாய்
அச்சித்திரம்
பாவங்களை கண்ணோடு நிறுத்தியபடி.//

நெஞ்சில் நிலை கொண்ட வரிகள் அக்கா .. நன்றி

சிவகுமாரன் said...

பலகைகள் , பல கைகள் சிலேடை ரசித்தேன்.
ப்ரியமுடன் வசந்த் -கவிதையும்
அருமை வாழ்த்துக்கள்


இராஜராஜேஸ்வரி said...

அதே குறைந்த வெளிச்ச இரவு
வகிடு வளைந்த புன்னகையோடு
இன்னும் சித்திரம் அப்படியே!!!//


சித்திரமாய் ஒரு கவிதை!

Angel said...

ஹேமா ! உங்க பதிவில் ஸ்பாம் பாக்ஸ்ல போய் பாருங்க கமெண்ட்ஸ் அங்கிருக்கு போல ..நேற்றைய எனது போஸ்டின்நிறைய பதில்களும் மெய்லுக்கு வந்தன ஆனா பின்நூட்டபெட்டியில் போகாமல் ஸ்பாம் பாக்ஸில் இருந்தது ...

வெற்றிவேல் said...

சித்திரமாய்....

முற்றும் அறிந்த அதிரா said...

எப்பவுமே வித்தியாசமாகவே சித்திகிறீங்க ஹேமா..

//கல்வி மறுத்து
தனிமை வெறுத்து
காதலித்த காதலையே கொன்று
தனக்குத்தானே
சிம்னி விளக்கில்
சவப்பெட்டி செய்து
படுத்துக்கொள்ளும் அவளை
இழுத்து வைத்து மூடி
ஆணியடிக்கும் பல கைகள்.///

அருமையான சிந்தனை... எப்பூடி இப்படியெல்லாம்????

Yoga.S. said...

காலை,வணக்கம் ஹேமா!எல்லோருக்கும் புரியும்படி/விளங்கும்படி அருமையான கவிதை!

மோகன்ஜி said...

கனவுகள் போர்த்திய பகல்... வரிகளின் வலிமையை எண்ணி நெகிழ்கிறேன். சபாஷ் ஹேமா.

தனிமரம் said...

சமூக சிக்களை உள்வாங்கி தீட்டிய ஓவியனின் சித்திரம் அழகான கவிதையை தந்து இருக்கின்றது கவிதாயினி மூலம்!

தனிமரம் said...

ஆணியடிக்கும் பல கைகள் !ம்ம் வார்த்தைகள் முண்டியடிக்கின்றது கவிதையில்!

அம்பாளடியாள் said...

நாடு வீடு
நகரும் நகரம்
நரகமாகும் கனவு
சுற்றுச் சுழல் காற்றில்
நாற்றமடிக்கும் சமூகம்
உடைந்த மனத் துகள்களில்
எண்ணங்களை கிறுக்கும் அவளுக்கு
வெற்றுச் சோற்றுக் கோப்பையாய்
அச்சித்திரம்
பாவங்களை கண்ணோடு நிறுத்தியபடி.

அருமையான உயிரோட்டம் உள்ள வரிகள் !!!......
தொடர வாழ்த்துக்கள் தோழி .

ஹேமா said...

எல்லோருக்குமே என் மனம் நிறைந்த நன்றி...தனித்தனியாக பதில் தரமுடியவில்லை.சொந்த வேலை அதிகமாகி மூளை பரபரப்போடு இருக்கிறேன்.வீடு மாற்றம்.வருட லீவு....அது இதென்று.எப்படியும் 2 மாதமாகலாம் நான் அமைதியாக.அதோட முழங்கை பலத்த வை உளைவு.எழுதக் கஸ்டமாயிருக்கு.முகப்புத்தத்துள்ளும் நேரம் போகிறது...எல்லாமே எல்லாமே !

விஷேசமாக ’ப்ரியமுடன் வசந்த்’க்கு மிக்க நன்றி.எதிர்க்கவிதையானாலும் அழகான கவிதை.நன்றி வசந்து....!

vimalanperali said...

நம் சமூகத்தின் நிகழ் அனுபவமாய்,அவலமாய்,
கொடுமையாய் இது/

அருணா செல்வம் said...

என் இனிய தோழி ஹேமா...

வித்தைக் கற்றவளின்
விரலிலும் ஆணியடிக்கப்
பட்டுள்ளதா?

சூப்பர் கவிதை.

(எனக்கு இன்றுதான் உங்கள் வலையில் கருத்தெழுத முடிந்தது. இத்தனை நாளாய்ப் படிக்க மட்டும் தான் முடிந்தது.)

Post a Comment