*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, September 10, 2012

சிக்குபுக்குக் காதல்...

தண்டவாளைங்களை
அணு அணுவாக
ரசிப்பவனிடம்தான்
காதல் கொண்டிருந்தேன்.

கனவுகள்
ஆசைகள்
பாசம் மற்றும்
அன்பு பற்றியும்
கதைத்தபடி
கைகளை இறுகப்
பற்றியிருந்தா(தே)ன்.

திசைமாறும்
பயணங்களையும்
நிமிடங்கள் மட்டும்
பட்டு மறையும்
பார்வைகளையும் பகிர்ந்தவன்
புகையிரதச் சில்லுடன்தான்
சிநேகம் வைத்திருந்தான்.

தொட்டுவிடா உறவானாலும்
ஈருடல் சிலிர்க்க
அதிர்ந்து ஓடி மறைகிறது
புகையிரதம் !!!

ஹேமா(சுவிஸ்)

12 comments:

தொழிற்களம் குழு said...

------------- ---------------------------------- ---------------
உங்கள் பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் சகோ...
-------------------------------------------------- ---------- --

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

அம்பாளடியாள் said...

திசைமாறும்
பயணங்களையும்
நிமிடங்கள் மட்டும்
பட்டு மறையும்
பார்வைகளையும் பகிர்ந்தவன்
புகையிரதச் சில்லுடன்தான்
சிநேகம் வைத்திருந்தான்.

அருமையான வரிகள் !!!!......

ஸ்ரீராம். said...

புகை இரதம்! அட!

கவி அழகன் said...

Alaku kavithai

குட்டன் said...

சிறப்பு!

Ramani said...

அருமை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சே. குமார் said...

கவிதை அருமை சகோதரி.

Yoga.S. said...

அருமை!////புகையிரதச் சில்லுடன்...........தான் சிநேகம் வைத்திருந்தான்!

சிட்டுக்குருவி said...

கவிதைக்கு அழ்கு சேர்க்கும் வரிகளை உங்களால் மட்டும் தான் பெற முடிகிறதோ

Uzhavan Raja said...

//திசைமாறும்
பயணங்களையும்
நிமிடங்கள் மட்டும்
பட்டு மறையும்
பார்வைகளையும் பகிர்ந்தவன்
புகையிரதச் சில்லுடன்தான்
சிநேகம் வைத்திருந்தான்.//

சிறப்பான வரிகள்..நன்றி

AROUNA SELVAME said...

ஒரு கண நேரத்தில் பார்வை
பரிமாறலில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு
இரயில் ஓடும் கண நேரத்தில்
இரண்டு தண்டவாளங்களும் இணையும் அழகை ஒப்பிட்டுக் கூறியிருப்பது.........

அருமை என் இனிய தோழி ஹேமா.

Post a Comment