நான் சுகம் கேட்டவர்களும்
என்னைச் சுகம் கேட்டவர்களும்
சுகமாயிருந்தார்கள்
என் சுகங்களை
பக்கத்து வீட்டு முற்றங்களில்
பரப்பிவிட்டு.
புழுதிக்காற்றின் பேரிரைச்சலோடு
என் இரகசியங்கள்
என்னையே வந்து உரசிக்கொண்டன
வெப்பக்குழல் சூடேற்றினாலும்
குளிரில் அவதிப்படுவதாய்
சிலிர்த்துக்கொண்டிருந்தன.
இரவில் மட்டுமே
பாடும் பறவை குளிரிலும்
நவீனத்துவ மொழியில்
கேட்டுக்கொண்ட சுகதுக்கங்களை
பகிர்ந்துகொண்டிருந்தது
பிரபஞ்சத்தின் அடி இருளில்.
சுதந்திரச் சிறகு முளைத்து
கிளைக்குக் கிளை
தாவிய அவைகளுக்குள்
விஷப் பூச்சிகள் முட்டையிட
கிசுகிசுக் குஞ்சுகள்
என் தோளில்
அதி பாரத்தோடு!!!
ஹேமா(சுவிஸ்)
என்னைச் சுகம் கேட்டவர்களும்
சுகமாயிருந்தார்கள்
என் சுகங்களை
பக்கத்து வீட்டு முற்றங்களில்
பரப்பிவிட்டு.
புழுதிக்காற்றின் பேரிரைச்சலோடு
என் இரகசியங்கள்
என்னையே வந்து உரசிக்கொண்டன
வெப்பக்குழல் சூடேற்றினாலும்
குளிரில் அவதிப்படுவதாய்
சிலிர்த்துக்கொண்டிருந்தன.
இரவில் மட்டுமே
பாடும் பறவை குளிரிலும்
நவீனத்துவ மொழியில்
கேட்டுக்கொண்ட சுகதுக்கங்களை
பகிர்ந்துகொண்டிருந்தது
பிரபஞ்சத்தின் அடி இருளில்.
சுதந்திரச் சிறகு முளைத்து
கிளைக்குக் கிளை
தாவிய அவைகளுக்குள்
விஷப் பூச்சிகள் முட்டையிட
கிசுகிசுக் குஞ்சுகள்
என் தோளில்
அதி பாரத்தோடு!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
29 comments:
முதல் ஆளாய் கருத்து வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த பேதைக்கு தான் புரியல. இன்னும் வளரனுமுன்னு நினைக்கிறேன்..
உங்க எழுத்துகளை படிக்கும் போதுதான் எனக்கு தெரிகிறது நான் தமிழில் எவ்வளவு பலவீனமாக இருக்கிறேன் என்று...
இப்போ புரிஞ்சிடுச்சி... சூப்பர்... நீங்க நவீன கால கம்பர்னாலும் தகும்...
அக்கா முதன் முறையாக உங்கள் பிளக்கில் கருத்திடுகிறேன். இருங்கோ கவிதைய வாசிச்சுட்டு வாறன்.
காதோடுதான் நான் பேசுவேன்... படத்திற்கு கமெண்ட் போட்டேன்.
கிசுகிசுக் குஞ்சுகள்... மிகவும் ரசித்தேன். வித்தியாசமான கரு.
'வதந்திகள் உண்மையாகும் நேரம்' என்று எப்போதோ ஒரு காதல் கவிதை படித்தது நினைவுக்கு வந்தத :)
நல்லாயிருக்கு சகோ..ரொம்பவும் பிடிச்சது.
கிசு கிசு எனும் அழுக்கு வதந்தி ....ஒருமுறை படித்ததுமே எனக்கு விளங்கி விட்டது ஹேமா ...
அருமையான அழகான கவிதை ..
கவிதை எனக்கு அதிகம் புரியல்ல அக்காச்சி :(
அயலவர் கிசு கிசு பேச்சை சொல்லுறீங்க என்று நினைக்கிறேன் :))))
நமக்கு காதல் கவிதை மட்டும் சட்டன புரிஞ்சுடும் :)))
இப்படிப்பட்டவர்கள் நடுவில் தான் இருந்து தொலைக்க வேண்டியிருக்கு...:((
நலம் விரும்பி வேடமணிந்தவர்களால் முளைத்த வதந்திக் குஞ்சுகள் அவர்களின் முகத்திரையை விலக்குமல்லவா!
படமும் தலைப்பும் தான் கவிதையின் பொருள் புரிய கொஞ்சம் கைகொடுத்தது! அருமை தொடருங்கள்!
ஊர் வாயோ உலை வாயோ என்பார்களே.... அப்படியா?
கவிதைக்கு பின்னூட்டமிடுவது எத்தனைக் கடினம் என்று இந்த கவிதையைப் படித்த பின் யோசித்தேன்.
வதந்தி, கிசு கிசுப் பற்றி இப்படியும் ஆழமாக யோசிக்க முடியும் என்று உங்களின் வரிகள் சொல்கிறது. புதிது
/சுதந்திரச் சிறகு முளைத்து
கிளைக்குக் கிளை
தாவிய அவைகளுக்குள்
விஷப் பூச்சிகள் முட்டையிட
கிசுகிசுக் குஞ்சுகள்/
பறக்கும் ரகசியங்கள்! உண்மைதான் ஹேமா. மனிதரின் மோசமான பலகீனங்களில் ஒன்று. நல்ல கவிதை.
//நான் சுகம் கேட்டவர்களும்
என்னைச் சுகம் கேட்டவர்களும்
சுகமாயிருந்தார்கள்
என் சுகங்களை
பக்கத்து வீட்டு முற்றங்களில்
பரப்பிவிட்டு.//
அருமையான சிந்திக்கத் தூண்டும் வரிகள்
ஆழ்ந்து உணர வேண்டிய கவிதை
மிக அழகான கவிதை......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தலைப்பும் கிசுகிசுக் குஞ்சுகள் என்ற வார்த்தையாளுமையும் மிகமிக ரசிக்க வைத்தது. உண்மையில் பேசுகிற வாய்களை அடைப்பது மிகக் கஷ்டமான விஷய்ம்தான்.
#நான் சுகம் கேட்டவர்களும்
என்னைச் சுகம் கேட்டவர்களும்
சுகமாயிருந்தார்கள்# எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ...
எப்படி இருக்கிறீர்கள் ஹேமா ? உங்கள் தளத்திற்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது ...
வார்த்தை கையாளும் யுக்தி உங்களிடம் இருந்து தான் கற்கவேண்டும் அக்கா .. அப்படி ஒரு நேர்த்தி
அன்பின் ஹேமா,
அருமை.. இறுதிப் பகுதி சுவையோ சுவை.. வார்த்தைகள் வண்ணக்கோலங்களாய் கொட்டுகின்றன ஹேமா...
அன்புடன்
பவளா
எதைச் சொல்லுவது அழகென்று...
இருங்கோ யாரிட்டையாவது கேட்டு அல்லது யாராவது போடும் கருத்துக்களைப் பார்த்தாவது ...
சொல்ல்கிறேன் எந்த வரிகள் அழகென்று...
அழகான கவிதை அக்கா
ஹேமா!
உங்கள் கவிதை விளங்கி கொள்ள- தமிழ் அறிவு அதிகம்-
வேண்டும்-
எனக்கு எப்படின்னு -
தெரியல!
நல்லவேலை தாமதமாக
வந்தேன் எனக்கு முன்னாள்-
படித்த மக்கள் விளக்கம் சொல்லி இருந்தார்கள்!
திரும்ப படித்து விட்டு-
மகிழ்ந்தேன்!
சொல்லாடல் அருமை...
மிகச் சிறப்பு!
வணக்கம் சகோதரி..,
உங்களது கவிதைகள் அருமை. நானும் சுவிஸில்தான் வசிக்கிறேன். எனினும் இங்கு வந்து சிறிது காலமே என்பதால் இலக்கிய தொடர்புகள், நட்பு என்பவற்றை ஏற்படுத்திக்கொள்ள ஆவலாகவிருக்கிறேன். நீங்கள் விரும்பின் உங்களது ஈமெயில் முகவரியைத் தரவும். உங்களது நட்பையிட்டு மகிழ்ச்சிகொள்வேன்..!
Kanchana, Swiss
என் இனிய தோழி ஹேமா
பறக்கும் இரகசியங்கள்
யோசித்து இரசித்துப் படித்தேன்.
எப்படித்தான் இப்படி எழுதுகிறீர்களோ...!!!
காதோடு பேசும் வார்த்தைகளின் என்னக்குவியல் கவிதையாக சிறகடித்து அருமை கவிதாயினி பறக்கும் ரகசியங்களே கவிதையான தலைப்பு.
கலக்கல் ஹேமா...
சுப்பர் அக்கா
Post a Comment