எல்லைகள் வகுக்கா
ஆகச்சிறந்த
ஆதுர(ம்) முத்தங்களை
எத்தனை முறைகள்
சுவையேற்றியிருக்கிறோம்
அவனும் நானுமாய்.
இறைவன் கலந்த
குறைந்த
வண்ணக்கலவைகளினால்
நிறங்களில் மாறுபட்டவனவன்
நம்புவீர்களா?!
நிறங்களற்றவனின்
தோள்கள் பற்றி
கொடியாகிப்
பின்
நூல் நூலாய்
பின்னிப்போயிருக்கிறேன்
அவன் விரல்களுக்குள்
அப்பப்போ.
எங்கோ வெகுதொலைவில்
தொலையாத அலைகளில்
தெருப்பாடகனின் புல்லாங்குழல்
தேன்மதுரமாய்
அது பிறந்த காடும் இருளாக.
நிறம்மாறுகிறோம்....
கருநீலநிறப் பட்டாம்பூச்சியாய்
வண்ணம் மாறி
பாதையும் தடுமாறி நான்.
அவன் அவன் அவன் .....
கண்டு பிடித்துத் தருவீர்களா
என் கருப்புக் காதலனை?
எப்படியறிவீர்கள் என்னவனை
அதற்குமொரு
கவிதை கேட்பீர்களோ!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
5 comments:
கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரி
ஆஹா கண்டுபிடிக்க அதுக்கும் கவிதை, கேட்போம்! வாழ்த்துக்கள் அருமையான கவிதை கவிதாயினி.
ஆதுர முத்தங்கள்! வண்ணக்கலவைகளின் குறைந்த அளவால் மாறுபட்ட நிறம்...ஆஹா...
இன்னொரு கவிதைதான் கொடுங்களேன்... அப்போதாவது கண்டுபிடிக்க முடிகிறதா பார்ப்போம்! :)))
அழகின் அழகு பேரழகாய் வரிகள்..!
நன்றி ஹேமா!
நிறம்மாறுகிறோம்....///ஹூம்..............!
Post a Comment