இறுகிக்
குவிந்து கிடந்த மனதை
வழியில் கிடக்கும்
பனித்திடல் விழுத்த...
காலுறைகளையையும்
போர்த்திய கம்பளியையும்
வாசலிலேயே கழற்றிவிட்டு
அசதியாய் பாரமாய்
நுழைகிறது நான்.
அங்கங்கள் இளக
ஒரு கோப்பை தேநீர்.
காலிக் கோப்பையையோ
அன்றி
என்னைச் சுற்றவோ
ஒற்றை இலையான்கூட
இல்லை.
சிதையும் சில சொற்களை
மீட்டெடுக்க
சிலாகித்த அன்பு அரட்டை
வலித்த நொடிகள்
நெகிழ்ந்த சமயங்கள்
அத்தனையையும்
அகழ்ந்தெடுக்க
அந்தப் பேரமைதி
போதுமாயிருக்கிறது.
அழவேண்டிருக்கிறது
இப்போ கொஞ்சம்...
இன்னொரு கோப்பைத் தேநீரில்
சற்றுப் பிறகாய் தோள் சாயலாம் ...
பனித்திடல் தாண்டியே
போகவேண்டிருக்கிறது
நாளையும்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
3 comments:
வணக்கம்
கவிதையின் வரிகள் ஒரு கனம் வலிக்கிறது.... சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சில யதார்த்தங்கள்.சில விதிகள்.சில கடப்பாடுகள்.இன்னும்,இன்னும்.....சில.........ஆறாது,ஆற்றாது!
எங்கெங்கோ புள்ளிகளை இணைத்து கோலம் போட்டு விடுகிறீர்கள்
Post a Comment