*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, October 24, 2013

அதி'காரம்'...


தடித்த எருமைத்தோலுக்குள்
குத்தியெடுத்த ஆணியென
சொற்கள் கடுக்க
பிறப்பின் கர்வமாய் 
ஆண் அதிகாரங்கள்.
 
தண்ணியில்லா
ஆழ் கிணறு விழுத்தி
அடக்கி மறுக்கும்  
ஆணவத்தை
அண்டம் அமுக்க   
புகைச் சுளியங்கள்
ஆழக்கிணறு கடந்து  
மேலெழும்பி வந்து 
நிலம் பரவும்.
 
ஒற்றைப்படைப் பூச்சில்
முகம் மட்டுமே அழகாய்
உள்ளிருந்து அசிங்கமாய்
ஆணாய்... 
அதிகாரம் சுட்டெரிக்க
விழுத்திய கிணற்றுக்குள்
கிடக்குமெனக்கு
பலநாள் சந்தேகமொன்று....

பகல்கள் கலங்க
கதிகலக்கும் உன்னால்
என்னதான் முடிகிறது   
இரவுப் பொழுதுகளில் 
மாத்திரம்!!!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5944

ஹேமா(சுவிஸ்)

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல "காரம்"...

Seeni said...

adengappaaa.....!

arumai.!

”தளிர் சுரேஷ்” said...

ஆழமான வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

மாதேவி said...

நல்ல கேள்வி.

அப்பாதுரை said...

தைக்கும் வரிகள் பன்னாடைகளுக்குப் புரியப் போவதில்லை.

பால கணேஷ் said...

பன்னாடைகள்... ஹா... ஹா... அப்பா ஸார் ஸ்டைலே தனிதான்! கவிதை மனதில் தைக்கிறது என்பதே நிஜம்!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரி.

Post a Comment