*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, October 09, 2013

கடக்கும் வாழ்வில்...


கிஞ்சித்தும்
அஞ்சாமல் விளையாடும் வாழ்வு
காற்புள்ளி தள்ளியாடும்
ஊஞ்சலென...

செரித்த உணவிலெங்கு
ஏப்பமும்
தொண்டையில் கரகரப்பும்...

பிந்திய நாட்களில்
ஹோர்மோன்களின் நடனம்
தாளா வயிறு
துர்நாற்றத் தீட்டாய்...

சஞ்சலத்துடன் ஆடும்
காற்றாடிப் பட்டம்
பொருந்தியிருகா
கயிற்றை நம்பி....

இறப்பில் செருகியிருந்த
கூர்ம புராணம்
கூலிக்காரன் மெலிந்த இடுப்பில்
அபத்தமாய்...

சுயம்புவாள்
குற்றமில்லாச் சுமங்கலி
கடவுள்
தன் கணவன்தானென...

அக்கினித் தீர்த்தமருந்தி
அடம் பிடித்த என்னை
ஆடடியென
பாடி வீரம் வளர்த்த
என் ஈழதேசம்...

புற்றாஞ் சோற்று
கறையான்களாய்
கூட்ட நெரிசலற்று
பூட்டிய சுவர்களுக்கு
ஓட்டையொன்றமைத்து
புறக்கடையாம் புலம்...

புறக்கணியாப் புட்கள்
புழையிட்ட மனிதர்களிடை
நுழையும் நிலாவாய்
புற்கை வேகும்
நீர்க்குமிழி வாழ்வில்...

போலிப்
புளகிதம்தான் வேறில்லை
புவனம் என்வசமே
புழைக்கடையில்
சில புண்ணிய காரியம்...

நான் நானாயிருக்க
இதுவும் கடக்கும்
இனியும் கடக்கும்
எல்லாமே கடக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

சக்தி கல்வி மையம் said...

எல்லாமும் கடந்து போகும்..
அருமையான கவிதைக்கு நன்றி சகோ...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...


அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

Abu Fahad. said...

அழகோ அழகு...நிலாவைப்போல்...

வாழ்த்துக்கள்....

மகேந்திரன் said...

அப்பப்பா..
வார்த்தைகள் விளையாட்டை
படித்து படித்து ரசித்தேன் சகோதரி...
===
புழையிட்ட மனிதர்களிடை
நுழையும் நிலாவாய்
புற்கை வேகும்
நீர்க்குமிழி வாழ்வில்...

உவமைக்கு உவமை ஏற்றும்
வரிகள்...
அருமை...

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

Post a Comment