*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 29, 2013

ஒளிகாட்டும் வழி...


சூரியன் திசை தவறிய தேசத்தில்
எமக்காய்
உருகி வழிகிறோமென
சில மெழுகுவர்த்திகளின்
கூக்குரலில்
விழித்தெழுகிறோம் நாளும்.

மனக் கல்லறைக்குள்
உயிர் உருக்கி
ஏற்றிய தீபங்களோடு
கார்த்திகைப்பூக்களை
கரிகாலர்கள் நடந்த
காடுகளில் விட்டெறிகிறோம்.

காலம் சபித்ததால்
விளக்குகள் அணைந்த
அநாதை மரங்களுக்கு
மின்மினிகள்கூட
ஒளிதர மறுத்த உலகிது.

பார்த்துப் பார்த்து
அழித்தொழிக்கப்பட்ட
என் சனத்தில் கையில்
கருத்த சூரிய
பொம்மையொன்று திணித்து
சண்டை முடிந்த பூமியின்
சமாதான பொம்மை
இதுதான் என்கிறார்கள்.

குருதி குடித்த தேசம்
விட்டகன்றபோது
கடைசியாய்
ஓடிய ஓடத்தில் கிடைத்தது
ஒரு குப்பி விளக்கு மட்டுமே.

பயங்கரவாதியொருவன்
பயங்கர ஆயுதங்களுடன்
தப்பிவிட்டதாய் செய்தி.

ஏதுமறியா விளக்கொன்று
புலம்பெயர்ந்து தவிக்கிறது
யாராவது
தீராத்தாகம் தீர்த்தெரிந்து
ஒளிபரப்ப
எண்ணெய் ஊற்றும் வரை!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் மனதை உருகவைத்தது.. அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியிலும் வலி புரிகிறது...

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டதா...? தெரியவில்லை... இருந்தாலும் இங்கே (http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html) பார்க்கவும்... நன்றி...

மேலும் தகவலுக்கு : dindiguldhanabalan@yahoo.com

இளமதி said...

அருமை!

உயிர்த் தீபம் எரிய
உணர்வெனும் எண்ணை ஊற்றி
உதவிட வருவார்கள்...

அருமை! போட்டிக்கு அனுப்பும் கவிதைதானே ஹேமா!
அனுப்புங்கள்! வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்!

த ம.2

Yaathoramani.blogspot.com said...

உள்ளத்தை உருக்கும்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

ஷைலஜா said...

கவிதை நன்றாக இருக்கிறது

வெற்றிவேல் said...

வணக்கம் ஹேமா...

மனத்தை உளுக்கும் வரிகள் ...

Ranjani Narayanan said...

கவிதை எங்களையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்

Post a Comment