*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 23, 2013

நிறையாத ஓவியங்கள்...


திணிக்கப்பட்ட விதிகளின்
மௌனித்த பொழுதிது...

வரைந்த பொழுதில்
தனைமறந்த பிரம்மன்
தவறவிட்ட
தூரிகை எச்சங்களாய்
இவர்களோ.

வலு நொடித்தாலும்
விதைத்த தைரியம்
மனதோடு
கக்கத்தில்
தன்னம்பிக்கையும் கூட.

வசைபாடும் சமூகத்தில்
பாசத்தால்
தம் வசமிழந்து
இரணங்களின் முடிவில்
தொடங்கும் மரணமென
இவர் வாழ்வு.

ஆழ ஊன்றும்
ஊன்றுகோலால்
மாற்றுத் திறனாளிகளென
விதியை
நொந்து எழுதியபடி
பயணிக்கும்
ஆற்றாமைகளோடு
வாழ்வு சலித்தபடி.

என்றாலும்
அன்போடு
ஒரு கையணைக்கும்
வா
நீயும்....என் இனமென!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

பால கணேஷ் said...

நிஜந்தான்! பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி வெகு நன்றாகத் தெரியும்! மனம் தொட்டது கவிதை!

Seeni said...

unmaithaan ...!

கவியாழி கண்ணதாசன் said...

திணிக்கப்பட்ட விதிகளின்
மௌனித்த பொழுதிது...//
அற்புதம் அருமை வார்த்தைப் பிரயோகம் ,பாராட்டுக்கள்

T.N.MURALIDHARAN said...

படமும் கவிதையும் நெஞ்சம் நெகிழ வைக்கிறது. ஹேமா

ஸ்ரீராம். said...

ஆதரவுக்கு நீள ஒரு கரமாவது கிடைத்து விடுகிறது. அருமை ஹேமா.

Ramani S said...

படமும் பதிவும்
தன்னம்பிக்கையூட்டும் இறுதி வரிகளும்
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 3

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் மட்டுமல்ல, படமும் மனதை மிகவும் நெகிழ வைத்தது...

கீத மஞ்சரி said...

\\என்றாலும்
அன்போடு
ஒரு கையணைக்கும்
வா
நீயும்....என் இனமென!!!\\

ஒவ்வொருவருக்குள்ளும் இந்த எண்ணம் எழுந்தாலே போதுமே... மாற்றுத் திறனாளிகள் என்ற குறிச்சொல்லும் தேவைப்படாமல் போகுமே...

மனம் தொட்ட கவிதை ஹேமா.

இளமதி said...

வலிதரும் படமும் கவிதையும் ஹேமா...:(
வலியுடன் சொல்லமுடியாத ஆத்திரமும் வருகிறது...

திணிக்கப்பட்ட விதிகள்
திணித்தது இறைவனாலா
திராணியற்றோரென
திமிர்கொண்டவராலா
இருவரும் ஈனர்களே
இருக்கட்டும் இவர்களுக்கும்
தீர்ப்புகள் எம்மால் திணிக்கப்படும்...

Post a Comment