*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, April 14, 2013

சித்திரைப்புத்தாண்டு 2013...


சித்திரையே
நீ செத்து
பல பத்தாண்டாயிற்றே.

உன் ஆடையவிழ்த்து
அவர்கள் புணர்கையில்
எம் கைகள்
ஆகாயம் பார்க்க
கட்டியிருந்தது.

காமமும் கயமையும்
போட்டிபோட்டு
கற்பழிக்கையில்
'ஒரு பெண்ணை
தாங்கா உம் கரம் 
இனம் தாங்குமோ'வென
உடைத்துப்போட்டார்கள்
கைமுனுக் கூட்டங்கள்
எம் மணிக்கட்டை.

உம்மோடே
கல்லறை கொண்டன
எங்கள் கோவில்களும்
கொண்டாட்டங்களும்.

அவர்கள்
சிதை என்றார்கள்
நீர் உறங்கும்
மயான பூமியை
நாமோ
சீதைகளின்
அந்தப்புரமென்றோம்.

கொண்டு வருவீர்கள்
புத்தாடை கட்டிய
எம் சித்திரையாளை
ஆத்மாக்களின்
ஆவல்கள் உண்மையானால்.

பறக்கும் ஒருநாள்
ஈழத்தின் தன்மானக்கொடி
அவள்  தாவணியில்

புத்தாண்டு
நம் தேசத்தில்
அன்றே.....

எமக்கெல்லாம்
அதுவரை புத்தாண்டு
சித்திரையாளின்
சிதையெரிந்த  வெக்கையோடுதான்!!!

 
என்னை மறக்காத என் அன்புறவுகள்
அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப்
புத்தாண்டு வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

15 comments:

விச்சு said...

பறக்கும் ஒருநாள்
ஈழத்தின் தன்மானக்கொடி
அவள் தாவணியில்
புத்தாண்டு
நம் தேசத்தில்
அன்றே..... // நிஜமாகும். தங்களுக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா. எல்லா நலமும் வளமும் கிடைக்க நான் வேண்டிக்கொள்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எல்லாம் ஒரு நாள் நிஜமாகும் சித்திரை உயிர்பெறும்
எல்லா நலங்களும் வளங்களும் விரைவில் கிட்டும் என்று நம்புவோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

அதற்காக நீங்கள் புத்தாண்டை இப்படி எதிர்கொள்வதா? கனக்கிறது ஹேமா.
புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பதே பொருளற்ற சடங்கு தானே? சில நம்பிக்கைகள் சடங்குகளினூடாவது புதுப்பிக்கப்பட்டால் தவறில்லையே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் ஒரு நாள் நிஜமாகும்...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மாலதி said...

சித்திரை தமிழரின் புத்தாண்டல்ல தை ஒன்றே தமிழரின் புத்தாண்டு .... உலகத்தமிழினம் ஒருநாள் விழிக்கும் தமிழீழமும் உதிக்கும் உதித்தே தீரும் இது அறிவியல் விதி ...

இளமதி said...

உண்மைதான் தோழி!
எங்கள் தேடல்கள் தொடரும்... கிட்டும்!

உங்களுக்கும் என் இனிய அன்பான சித்திரைப்
புத்தாண்டு வாழ்த்துகள் !

ஸ்ரீராம். said...

மிகுந்த கனமான வார்த்தைகள். அப்பாதுரையை வழிமொழிகிறேன்.

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் 'வானம் வெளித்த பின்னும்' சக வாசக நண்பர்களுக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

இனி நடப்பன நல்லனவாகட்டும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள், ஹேமா.

VijiParthiban said...

அருமையான வரிகள் ... என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள...

தனிமரம் said...

இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹேமா!

செய்தாலி said...



இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

காலம் என்றுமே இப்படியே இருந்து விடப்போவதில்லை ஹேம்ஸ்.. விடியும் ஓர் நாள். அதற்கான நம்பிக்கையை இன்று விதையுங்கள்.

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post a Comment