மெல்லக் கலைகிறது
குளிர்காலம்
தளிர்விடும்
மொக்குகளிடமிருந்து !
கையுறைகளும்
காலுறைகளும்
இனிப் பதுங்கிகொள்ளும்
பருவ வெயில்
நகரா ஊர்திகளில்!
ஒற்றைநாள்
பருவவெயில்
போதுமாயிருக்கிறது
கைகொடுத்து
தூரமாய்க் கடக்கவைக்க
பறவைகளையும்
பார உடைகளையும் !
சங்கடங்கள் தொடரும் இனி....
முக்கால் வருட அவதி
போதுமென
உலவிடும்
குட்டை உடைகள்
கண்கள் குளிர !
நானோ....
பார்த்துப் பார்த்து
சேமித்து வைத்திருக்கிறேன்
பத்துப்பதினைந்து
பனியுதிர்த்த
பழைய இலைகளை
பாட்டிக் கதைகள் சொல்ல !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
7 comments:
வணக்கம்
கவிதையை ரசித்தேன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்!
காலத்தின் கோலத்தைக் காட்டும் கவிபடித்தேன்
ஞாலத்தின் வேகத்தில் நாம்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
பனியுதிர்த்த பழைய இலைகளிலும் சொல்வதற்கு இருக்கின்றன குளிர்க்கதைகள்!
அருமை...
நலமா மகளே! இந்த வயதில் நானும் எப்படியோ, அங்கு வந்து திரும்பி விட்டேன்! ஆனால் உன்னை நேரில் காண இயலாமல் போனது வருத்தமே!
ம்..........ம்......!
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
Post a Comment