*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, August 20, 2012

அப்பாவின் அழகு பொம்மை...

அப்பா...
நிறைய அழகு பொம்மைகளைச்
சேர்த்து வைத்திருப்பதாக
சொன்னார்.

ஒரு பொம்மையை மட்டும்
கொஞ்சம் துப்புரவாக்கி
கொஞ்சம் அழகாக்கி
அடுக்களையில்
வைத்திருப்பதாகவும் சொன்னார்.

அம்மாவைத்தவிர
எதையும் எவரையும்
கண்டதில்லை நான்
அடுப்படியில்.

சும்மாதான் கேட்டுப் பார்த்தேன்
ஒரு பொம்மை
விளையாட வேண்டுமென
கை காட்டினார்
அம்மாவின் பக்கம்.

இப்போ...

அப்பாவும்
அவர் பொம்மைகளும்
இல்லாமல் போயிருந்தன.

அப்பாவின் அறையில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்
அம்மா புறுபுறுத்தபடி.
வேறும் சில பொம்மைகள்
இருக்குமோ
அப்பாவின் அறையில்!!!

ஹேமா(சுவிஸ்)

29 comments:

சின்னப்பயல் said...

அப்பாவின் அறையில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்
அம்மா புறுபுறுத்தபடி.
வேறும் சில பொம்மைகள்
இருக்குமோ
அப்பாவின் அறையில்!!!///

Fantastic Hema...nice Congrats :-)))

கவி அழகன் said...

Appakku amma pommai , amma madumala innum pala

K said...

அழகான கவிதை ஹேமா! நல்ல முடிவு! அம்மா புறுபுறுத்துக்கொண்டு தேடுகிறார் என்பது அழகான ஒரு இடமாகும்! உண்மையில் அம்மா புறுபுறுக்கவில்லை! அப்பா இல்லாமல் போன கவலையை அப்படி வெளிப்படுத்துகிறார்!

அருமையான கவிதை!

arasan said...

தரமான படைப்பாக்கம் அக்கா ..
கேட்ட கேள்வி நச் ...

விச்சு said...

நல்ல கவிதை.. நான் முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடருங்கள்...

வாழ்த்துக்கள்... நன்றி... (5)

ராமலக்ஷ்மி said...

சிறப்பான கவிதை ஹேமா.

ஸ்ரீராம். said...

என் மாமா ஒருவர் தான் எழுபதுகளிலேயே வாஷிங் மெஷின் வாங்கி விடாதாகக் கூறி மனைவியைக் கை காட்டுவார். அது நினைவுக்கு வந்தது. அப்பா அறையில் வேறு பொம்மைகள் இல்லாதிருக்கட்டும்!

Angel said...

புரு புருக்கும் அம்மா /கள்ளமில்லா குழந்தை /ஆதிக்கதந்தை மூனுபேரையும் சேர்த்து அழகிய கவிதை தந்திருக்கீங்க .
ஆனா பொம்மை வைத்திருக்கேன் என்றவரை பாலசந்தர் பட ஹீரோயின் மாதிரி கற்பனையில் மிதித்து விட்டேன் :))

தனிமரம் said...

ம்ம் புறுபுறுத்த படி!ம்ம் அழகான கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

அப்பாவின் அறையில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்

படமும் கவிதையும் அழகிய பொம்மையாய் !

Rasan said...

அழகான வரிகள். தொடருங்கள்.

இன்று என்னுடைய தளத்தில் ஏணிப்படி

அருணா செல்வம் said...

ஒரு பொம்மையை மட்டும்
கொஞ்சம் துப்புரவாக்கி
கொஞ்சம் அழகாக்கி
அடுக்களையில்
வைத்திருப்பதாகவும் சொன்னார்.

கொலுவில்
வைக்க வேண்டியதெல்லாம்
அடுக்களையில்
வைத்துவிட்டு
அறைக்குள் தேடினாள்....

பாவம் அழகு பொம்மை

நன்றிங்க என் இனிய தோழி ஹேமா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பின்னிட்டீங்க ஹேமா! பெரும்பாலான தாய்மார்களின் நிலையை இதைவ்ட அழகா சொல்ல முடியாது.
இதோ பொம்மைக்காக என் ஒட்டு.

vimalanperali said...

பொம்மைகள் அற்ற அறைகள் உள்ள வீடுகள் நிறைந்து கிடக்கிற தேசத்தில் அம்மாக்கள் இன்னும் அப்பாக்களையும் ,பொம்மைகளையும் தேடி ஓடிக்கொண்டே இருக்கத்தான் செய்கிறார்கள்,

Anonymous said...

அருமையான கவிதை சகோதரி !!! ஞாபங்கங்களுக்குள் புதைந்தவைகளை புறத்தில் தேடுவதே மனித குணம் - அம்மாவின் தேடல்களும் அப்படியானவையே !!!

பால கணேஷ் said...

ஆஹா... ரசனையான வரிகளில் புன்முறுவல் பூக்க வைத்த அழகுக் கவிதை, அம்மா புறுபுறுக்கிறார் என்ற வரிகளை மிக ரசித்தேன்.

சசிகலா said...

பொம்மை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் சகோ. நீங்கள் குறிப்பிட்ட விதம் மிகவும் ரசிக்க வைத்தது.

MARI The Great said...

நல்ல கவிதை சகோ! (TM 10)

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் ரசிக்கவும் நெகிழவும் வைத்த கவிதை! அம்மா ஒவ்வொரு வீட்டிலும் பொம்மையாக மட்டுமா வாழ்கிறார்? சிறப்பான படைப்பு!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

ஆத்மா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பொம்மைகளாகாக பெண்களை ஆண்கள் கொண்டுள்ளனரோ......
ஆனாலும் தாய் தான் உண்மையான பொம்மை தன் சேய்க்கு

அழகான வரிகளில் அழகான கவிதை

அப்பாதுரை said...

one of your best.

வானவில் ஜீவா said...

அப்பாவும்அவர் பொம்மைகளும் இல்லாமல் போயிருந்தன...........

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான கவிதை.

Athisaya said...

ஹேமாக்கா எத்தனை அர்த்தம் சொல்கிறது உங்கள் வரிகள்.வாழ்த்துக்கள் அக்கா!!!அருமை!



ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

Unknown said...

அம்மா...!!!

SELECTED ME said...

இருந்தாலும் இருக்கும்

வெற்றிவேல் said...

எனக்கு இன்னும் கறுப் பொருள் விளங்க மறுக்கிறது தோழி...

அ. வேல்முருகன் said...

இல்லாமல் போனபின்
எத்தனை பொம்மைகள்
இருந்தென்ன பயன்

அதென்ன
சென்றபின் தேடுதல்

Post a Comment