*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, August 23, 2012

இற்ற சருகிலும் நீ...


பச்சையம் தொலைக்கும்
மஞ்சள் இலைகளுக்குள்
கூடொன்று கட்டி
தந்துவிட்டு
போயிருக்கலாம்
நீ....
சருகாகினாலும்
கூட்டுப்புழுவாய்
ஒட்டியிருந்திருப்பேன்
இறகு தர
வருவாய் என்கிற
நப்பாசையோடு.

இப்போதும்
அங்கொன்றுமான
இங்கொன்றுமான
உன் நினைவுகளை
சேர்த்தெடுத்து
இற்றுத் தளர்ந்து மடியும்
அதே சருகின்
நரம்புகளில்
ஒட்டிக்கொண்டுதான்!!!

ஹேமா(சுவிஸ்)

30 comments:

அ .கா . செய்தாலி said...

ம்ம்ம் ...ம் (;

சருகின் நரம்பில்
சான்சே இல்ல .....செமையா இருக்கு

அம்பாளடியாள் said...

சருகாகினாலும்
கூட்டுப்புழுவாய்
ஒட்டியிருந்திருப்பேன்
இறகு தர
வருவாய் என்கிற
நப்பாசையோடு.

நம்பிக்கையே வாழ்க்கை !..
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோ .

சிநேகிதி said...

மென்மையான வரிகள்

கவி அழகன் said...

Ippavum oddikondu

Alakaka mudithullerkal kavithaiyai

மாத்தியோசி - மணி said...

நல்ல அழகான, உணர்வுள்ள கவிதை!

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை ஹேமா.

/அதே சருகின்
நரம்புகளில்
ஒட்டிக்கொண்டுதான்!!! /

அருமை.

மாதேவி said...

கவிதை முடிவு மிகவும் அழகு. எமது நெஞ்சிலும் ஒட்டிக்கொள்கின்றது.

Ramani said...

எதிர்பார்ப்பில் இருக்கும்
நம்பிக்கை மனசைத் தொட்டது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 4

angelin said...

சருகாகினாலும்
கூட்டுப்புழுவாய்
ஒட்டியிருந்திருப்பேன்
இறகு தர
வருவாய் என்கிற
நப்பாசையோடு.//

மிகவும் பிடித்த வரிகள் ஹேமா .
அருமை !!

கும்மாச்சி said...

அருமையான கவிதை வாழ்த்துகள் ஹேமா.

சிட்டுக்குருவி said...

நல்ல கவிதை... விஞ்ஞானியாக வேண்டியவங்க...
விஞ்ஞானக் கவி என்றும் சொல்லலாம் போலுள்ளது...:)

நிலாமகள் said...

கூட்டுப் புழுவாகா வேத‌னைதாண்டி சிற‌கு முளைக்க‌ட்டும் தேடிச் செல்ல‌!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ஸ்ரீராம். said...

'இற்ற சருகிலும் நீ'
அருமை.
படத்தில் மேலே இருக்கும் காய்ந்த இலையைப் பார்க்கும் போது ஏதோ உயிரினம் போலவே தோன்றுகிறது! :))

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்பின் ஹேமா,

இதமாக,மனதை வ்ருடும் அருமையான கவிதை.வாழ்த்துகள்.

அன்புடன்
பவள சங்கரி

அப்பாதுரை said...

சருகின் நரம்பு... கவர்கிறது.

Yoga.S. said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!

s suresh said...

சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்...தொடருங்கள்...

வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)

ஆ.ஞானசேகரன் said...

எப்பொழுதும் போல நல்ல வரிகள்..

வாழ்த்துகள் ஹேமா.... நலமா?

athira said...

ஆஹா என ஒரு இதயம் தொடும் கவிதை ஹேமா... அனுபவித்து எழுதுவதுபோல எழுதுறீங்க... எல்லோராலும் இப்படிக் கற்பனை பண்ண முடியாது.

athira said...

அந்தச் சருகை உற்றுப் பார்க்க, ஒரு ஓணான் பிள்ளை இருப்பது போல இருக்கு.

மீனாக்ஷி said...

தலைப்பே பிரமாதம்! படம் அட்டகாசம்!

அன்பு உள்ளம் said...

அருமையான வரிகள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
மேலும் தொடர என் வாழ்த்துக்கள் தோழி .

விச்சு said...

நரம்புகளில் ஒட்டிக்கொண்டுதான்... ஹேமா உங்கள் கவிதைகளில் மெருகு கூடிக்கொண்டே செல்கிறது.

இரவின் புன்னகை said...

அதே சருகின்
நரம்புகளில்
ஒட்டிக்கொண்டுதான்!!!

தோழி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறீர்கள்...

வாழ்த்துகள் தோழி

....வெற்றி

தனிமரம் said...

நரம்புகளில் ஒட்டிக்கொண்டே !ம்ம் கவிதாயினி அருமையாக உணர்வைச்சொல்லிய படிமம்!ம்ம்

தனிமரம் said...

வருவாய் ,நற்பாசை/ம்ம்ம் சிலநேரங்களில் !!

AROUNA SELVAME said...

காத்திருப்பின் நம்பிக்கை
காய்ந்து போனாலும்
நரம்பில் ஒட்டிக்கொண்டே...

அருமைங்க என் இனிய தோழி ஹேமா...

Post a Comment