*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, August 04, 2012

காதல் துளிகள் (1)...

வாசனை தெரிந்திருக்கும்
வடிவம் அறிந்திருக்காது
அதுபோல
பெயெரில்லாப் பூ
நீ...

தலை கோதும் விரலும்
தாலாட்டும் உன் குரலும்
இன்றெனக்கு
இல்லையென்றால்
இயற்கையில் ஏதோ
இன்னலே தவிர
உன்னாலாயிருக்காது.

என் கண் மையை
உன் கையிலிடுகிறேன்
தேடிப்பார்
எனக்குள் நீயா
உனக்குள் நானா
என்று !

மேகம் விட்டிறங்கிய
பூவொன்று
நேற்று
காற்றின் வரவுக்காய்
திறந்தே கிடந்த
என் வீடு புகுந்து
மௌனம் உடைத்த
மொழி திரட்டி
என் பெயரை
உரசிப்போனதால்
இன்றுமுழுதும்
புதுகாற்றைச் சுவாசித்ததாய்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது
என் உள்ளுயிர் !

ஒரு பிரிவின்
சுவடென்றறியாமல்
அவன் பார்வை வரித்திழுக்க
மேலிருந்து கீழாக நகர்ந்தேன்
அழுத்தப்பரப்பில்
அவன் நீராய்
அவன் கண்ணில்
மிதக்கும் மீனாய் நான் !

'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்'

ஹேமா(சுவிஸ்)

36 comments:

நிரஞ்சனா said...

ஹையா... காதல் தடவிய கவிதைகள் படிச்சதுமே அர்த்தம் புரிஞ்சிடுச்சு எனக்கு. அருமையா இருக்குக்கா. சூப்பர்ப்.

பால கணேஷ் said...

மெல்லிய தென்றல் காற்றின் இதம் கவிதைகளில் இருக்கிறது ஹேமா. அருமை. மிக ரசித்தேன்.

rishvan said...

'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்'
super hema...

ஆத்மா said...

மேகம் விட்டிறங்கிய
பூவொன்று
நேற்று
காற்றின் வரவுக்காய்
திறந்தே கிடந்த
என் வீடு புகுந்து..............

அப்பா... படிக்கும் போதே ஜி(சி)ல்லென்று இருக்கிறது
வரிகள் ரசிக்கக் கூடியது மீண்டும் மீண்டும் ரசித்தேன்

VijiParthiban said...

//வாசனை தெரிந்திருக்கும்
வடிவம் அறிந்திருக்காது
அதுபோல
பெயெரில்லாப் பூ நீ...//
அருமையான வரிகளுடன் ஆரம்பம்மான காதல் கவிதை அழகாகவும் அருமையாகவும் புரிதலும் இருந்தது ... சூப்பர் தோழி ஹேமா...
'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்' என்று அழகாக கூறியுள்ளமை அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான கவிதை...
ரசித்தேன்....

நன்றி…
(த.ம. 3)

MARI The Great said...

நல்ல கவிதை!

கவி அழகன் said...

Kathal then vadiyum kavi varikal

அம்பாளடியாள் said...

அழகிய கவிதை வரிகள் முடிவில்
'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்'
தொடர வாழ்த்துக்கள் .

தனிமரம் said...

வாசனை தெரிந்திருக்கும் வடிவம் அறிந்திராத!!ம்ம் அழகான வரிகள்!
பிரிதலும் புரிதல் தானே!ம்ம்ம்

சின்னப்பயல் said...

உள்ளுயிர்... :-)))) அற்புதமான பதம்..!!

”தளிர் சுரேஷ்” said...

அழகானவரிகளுடன் அற்புதமான படைப்பு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பா மலர்!
http://thalirssb.blospot.in

ஸ்ரீராம். said...

காதலின் மீதான நம்பிக்கை இயற்கையை சந்தேகிக்குமே தவிர காதலை இல்லை என்கிறது!அருமை ஹேமா...

ஸ்ரீராம். said...

வானம் வெளித்த பின்னும் தலைப்புக்குக் கீழே ஓடும் வரிகளை இப்போதுதான் பார்க்கிறேன்.... முன்னரே இருக்கிறதா ஹேமா?

ஹேமா said...

ஸ்ரீராம்....வலை தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது.உங்கள் ‘உள் பெட்டியியிலிருந்து’லிருந்து பலதரம் ஒத்தியெடுக்கிறேன் என்று சொல்லி பல பொன் மொழிகள் எடுத்து வந்து போட்டிருக்கிறேனே.இப்போகூட ஓடிக்கொண்டிருப்பது ‘எங்கள் புளொக்’ தந்ததுதான் என்று நினைக்கிறேன் !

Anonymous said...

mmmmmmmmmmmmmmm . அக்கா கக்கா ஆஆஆஆஆஆஆஆஅ காதல் ஆஆஆஆ ...இருங்கோ கவிதை நல்லா தன் இருக்கு ...உங்கட அப்பா அடுத்த வாரம் வருவார் நியபாம் இருக்கட்டும் ..

Seeni said...

evvalavu kaathalu....!

arumai...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வருடும் வரிகளால் மனதை நிரப்பிய கவித்துளி

vimalanperali said...

கண்மையை கையிலிடும் போதே வந்து விடுகிற காதிலியின் நினைவும்,காதலும் தரும் சுகம் தனிதான்.

Robert said...

பெயெரில்லாப் பூ நீ ; உள்ளுயிர்// வார்த்தை பிரயோகங்கள் அருமை. தொடரட்டும்...

மாதேவி said...

காதல் துளிகள் மனத்தை வருடி நிற்கின்றது ஹேமா.

வெற்றிவேல் said...

மனதை வருடும் நிலா நீ.

ananthu said...

'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்' ... இதமான கவிதை ...

Athisaya said...

ஜில் ஜிலஜ கதால்.ஹேமா அக்கா மொத்தத்தில இரண்டுமே அருமை....அழகு..ம்ம்ம்ம ஆநல்லா இருக்குக்கா!சந்திப்போம்.

எனக்கொரு பதில்!!!!!

அப்பாதுரை said...

முதலிரண்டு வரிகளும், கண்மை தேடலும் சொக்க வைக்கின்றன.

கீதமஞ்சரி said...

தொலைந்து போனதை வெற்றிலையில் மை போட்டுக் கண்டுபிடிக்கலாமாம். இங்கே உள்ளங்கையில் மை போட்டு தேடுகிறார்கள் ஒருவரை ஒருவர் ஒருவரை ஒருவரில் தொலைத்துவிட்டு. பிரிந்தபின்னும் புரிதல் நிலைத்தல் அதிசயம். அழகான கவிதை ஹேமா.

ப்ரியமுடன் வசந்த் said...

வாசனை தெரிந்திருக்கும்
வடிவம் அறிந்திருக்காது
அதுபோல
பெயரில்லா காற்று நீ...
தலை கோதும் விரலும்
தாலாட்டும் உன் குரலும்
இன்றெனக்கு
இல்லையென்றால்
இயற்கையில் ஏதோ
இன்னலே தவிர
உன்னாலாயிருக்காது.

என் கண் மையை
உன் கையிலிடுகிறேன்
தேடிப்பார்
ஆயுள் ரேகையாய்
தனித்திருப்பேன்
உனக்குள் நான்...!

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் ஹேம்ஸ்..

புரிந்து வாழ்தலே இதம் :-)

சிகரம் பாரதி said...

Arumaiyaana kavidhai. Vaalththukkal.
Enadhu thalam -
http://newsigaram.blogspot.com

அருணா செல்வம் said...

என் இனிய தோழி ஹேமா...

காதல் துளிகளைக்
கவிதையில் உடைக்கிறீர்களா...?

அருமைங்க தோழி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கையிலிட்ட மையில்
உயிரில் கலந்த உறவொன்று
தெரிந்திடும்..
கலங்காதிரு மனமே!!!

மாலதி said...

என் கண் மையை
உன் கையிலிடுகிறேன்
தேடிப்பார்
எனக்குள் நீயா
உனக்குள் நானா
என்று !//அசத்தல்

ஹேமா said...

காதல் துளிகளோடு இசைந்து கலந்துகொண்ட அத்தனை அன்புக் காதலர்களுக்கும் என் அன்பு நன்றி.

வசந்து....கவிதை மாத்தி யோசிச்சு அசத்தல் !

கண்ணம்மா said...

beautiful feel hema..only u can..

Thanglish Payan said...

Nice poet !!!

Ashok D said...

நல்லாயிருக்குங்க ஹேமா :)

Post a Comment