*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, November 23, 2014

முற்றில்லா நம் நாட்கள்...

அடித்துச் சொல்கிறார்கள்
போர் இல்லையென்று.

ஏன் இன்னும் ஊருக்குள்
இராணுவம்
சுற்றிவளைப்பு
இறக்கவே முடியா
பாரப் பொதிகளுடன்
கழுதைகளாய் நாம் ?

உச்சுக்கொட்டும்
அவர் அழைப்பு
வீடில்லா நாய்களாய்
மொழியில்லா நாய்களாய்
தலைவனற்ற தேசத்தில் நாம்.

பதுங்கு குழிகள் மூடினாலும்
சீராகாப் பள்ளிகளும்
நீக்கா முள்வேலிகளும்...

தொடரும்
கேள்விகள் பதில்களும்
விசாரணையும்
மண்டியிடுதலும்...

வஞ்சம் தீர்க்க
வடிவான பொறிகளை
வாசனைப் பூக்கள் மறைக்க
பசிக்காமலே புசிக்கும்
உடல் முழுதும் புணர விரும்பும்
புத்தமக(கா)ன்கள்.

யார் சொன்னார்கள்
போர் ஓய்ந்ததென்று ?

கருவறைக் காய்ச்சல்போல
யாருக்கும் தெரிவதில்லை
எம் அவிச்சல்!!!

புகைப்படம் - ஜெரா Jera Thampi

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

தனிமரம் said...

கருவறைக் காய்ச்சல்போல
யாருக்கும் தெரிவதில்லை
எம் அவிச்சல்!!!// சர்வதேசத்துக்குப் புரியும் ஆனாலும் ஒரு நடிப்பு!

தனிமரம் said...

கேள்விகளுக்கு பதில்!ம்ம்ம்

'பரிவை' சே.குமார் said...

கருவறைக் காய்ச்சல்போல
யாருக்கும் தெரிவதில்லை
எம் அவிச்சல்!!!

ஆஹா... அருமையான வரிகள்...
வெளியில் தெரிந்தலும் யாரும் வெளிப்படுத்துவதில்லை.
அருமை சகோதரி.

Post a Comment