*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, November 15, 2014

இரவுக் காதலன்...

நேற்றொருவன்
என்னை
உடைக்கத்தொடங்கியிருந்தான்
மொழியற்ற
உளறல் தேசத்துள்
நானற்று
நினைவிழந்திருந்தேன்.

மொழி மந்திரமாய்
புரியத்தொடங்கியது
வீணையின் இதமென்றான்

மெல்ல முறுவலித்தவன்
நீ....
மல்லிகையின் இனமடியென
இடையொடித்து
பின் ஒட்டிக் களிம்பிட்டு

என்னை எரித்து
தானே....
புகைந்துகொண்டிருந்தான்
பெரும் சேவகமென
என் விசும்பல்களுக்கும்
கேவல்களுக்கும்
ஏதேதோ பெயரிட்டபடி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

'பரிவை' சே.குமார் said...

என்னை எரித்து
தானே....
புகைந்துகொண்டிருந்தான்
பெரும் சேவகமென
என் விசும்பல்களுக்கும்
கேவல்களுக்கும்
ஏதேதோ பெயரிட்டபடி!!!

ஆஹா... அழகான வரிகள்
கவிதை அருமை அக்கா.

தனிமரம் said...

நானற்று
நினைவிழந்திருந்தேன்//மயக்கம் காதலோ!ம்ம்

Seeni said...

சிலாகித்துச் சென்றது கவிதை

Post a Comment