*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, June 27, 2014

போதை ஒழிப்புத் தினமாமே...

திறக்கும் மதுப்புட்டி
வாசனைபோல
போதை துளைத்த
உன் வார்த்தைகளின்
இளஞ்சூட்டில்
இன்னும் நான்.

மதுவின்
இறுதிச் சொட்டில்
இதழ் முத்தமென
இதமாய் இனித்து
மிதக்கிறது
மனதின் ப்ரியங்கள்.

குவளை வழியும்
பகார்ட்டியில்
நீந்தவிட்ட
பனிக்கட்டி வார்த்தைகளில்
எனக்கான போதையை
அளவிட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஒரு கதைசொல்லியின்
புலம்பலாய்
தெளிவற்று விலகி
விளங்கிக்கொள்கிறார்கள்
நாகரீக மதுக்கனவான்கள்.

நீயின்றியும்
நான் நனைவேன்
நமக்கான மழையில்.

உயிரை
உருக்கும் கனலென
'ஜிவ்'வென
போதுமாயிருக்கிறது இக்காதல்
தப்பிப் பிழைத்துக்கொள்ளலாம்!!!

ஹேமா(சுவிஸ்)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான்...

பால கணேஷ் said...

மதுவின் கதகதப்பும் போதையும் கவிதையிலும்.

ரூபன் said...

வணக்கம்

திருந்தினால் நன்றுதான்.... கவிதை அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Subramaniam Yogarasa said...

நன்று.......இது வேறு போதை என்று நினைக்கிறேன்!/////:நல்ல வேளை......பேதை ஒழிப்புத் தினம் என்று ஒன்று இன்னமும் நடைமுறைக்கு/தீர்மானித்து வரவில்லை,ஹ!!ஹ!!ஹா!!!

ஜெ.பாண்டியன் said...

கொஞ்சம் கஷ்டமும்
கொஞ்சம் இஷ்டமும்
கொஞ்சமாவது வேணும்..

தனிமரம் said...

கவிதை பாடுபொருள் அருமை தலைப்புக்கும் .கவிதைக்கும் அதிக இடைவெளி ஐஸ்க்கட்டி போல!ஹீ

Post a Comment