*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, February 04, 2014

66 வருட சுதந்திரமா???

கருப்பு தேசத்தில்
சிங்கங்களின் ஆட்சிக்குள்
பிறந்துவிட்டதால்
எத்தனை நாள்தான் நடிப்பது

நாம் ?

இன்னும்
இப்போதும்

இன்றும்
பாதம் தடக்கிய இடமெல்லாம்
நம் இனத்தில் எலும்புக்கூடுகள்
கேள்விகள் ஏந்திய முகங்களை
எந்தப் பதில்களுக்குள் புதைப்பது ?

கருப்பு வெள்ளை வ(வாக)னங்களில்
யுகப்பசியோடு காணாமல்போனவர்கள்
கனவுகளை
எந்த மணல்கடிகையில்
அடைப்பது ?

தினம் செத்துப் பிறக்கும்
ஈழத் தமிழனின் விதியை
66 வருடங்கள்
நஞ்சு நுரைத்த கடலில்
அலைய விட்டவர்களாய்
விதியை எழுதிய
பிரித்தானியர்களை....???

திடுக்கிட்டு விழிக்கும்போதெல்லாம்
முகத்தருகே 

தடமழுத்தி
" மன்னித்து மறந்து

வாழப் பழகிவிட்டீர்களா"
என்கிற கேள்விகளோடு
நொடிதானும் விலகாத
அந்த விம்பங்களை
என்ன செய்வது ?!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தான்...

MANO நாஞ்சில் மனோ said...

சுதந்திரமாம் சுதந்திரம் போங்கடா....

மகேந்திரன் said...

சுதந்திரம் என்பது
மனிதவேட்டையாடும்
மாபாதகர்களுக்குத்தானோ என்று எண்ணத்
தோன்றுகிறது சகோதரி..

Post a Comment