நான்.....
தவித்த நேரமெல்லாம்
இறுகிப் பிடித்துக்கொண்டாய்
என்னிரு கைகளை
பாவியாய் நான் தர
எதுவும் என்னிடம் இருக்கவில்லை.
சில கவிதைக் கிறுக்கல்களின்
மடிப்பு விளிம்புகளுக்குள்
மறைத்த உன் முகம்
வழியாமல் தவிப்போடு
எனக்கு மட்டுமே தெரியும்படியாய்.
கோடு கிழிக்காவிட்டாலும்
தாண்ட மனமில்லா
அன்பைத் தந்திருந்தாய்
உள்ளங்கை வெப்பத்துள்
நீ...
மிகச் சுதந்திரமாய்
சாகவாசமாய்
சாமான்யமாய்
காத்திருப்பதே சுகமாய்
நானங்கு.
எதார்த்தமும்
நிதர்சனங்களும்
சமூகமும்
முகம்தானென்று
எதிர்கொண்டால்
வாழ்வு எமக்கானதாய்
நம்பிக்கையில்லையெனக்கு.
உன் முகத்தை
விளிம்பிலிருந்து வழிந்தோடவிட
அதிக நேரமில்லையெனக்கு
ஆனால்....
உன் உள்ளங்கை வெப்பம் குறித்த
கவலைதான் அதிகமெனக்கு.
இன்னும்...
இறுக்கிய
உன் கைகளுக்குள்தான்
என் அன்பு.
சிலுவைகளை
கைகளுக்குள்
ஒளித்து வைத்திருப்பதாய்
பதை பதைக்கிறாய்.
விடுத்து விட்டெழும்பு
கையின் ரேகைகள்
உன் பிறப்பின் அளவைகளை
நிர்ணயிப்பதில்லை.
கைகளைத் திற
என் கவிதை விளிம்புகள் சொல்லும்
வெப்பத்தின் அளவை
என் கைகள் புதையுண்ட
அளவையும் கூட!!!
ஹேமா(சுவிஸ்)
தவித்த நேரமெல்லாம்
இறுகிப் பிடித்துக்கொண்டாய்
என்னிரு கைகளை
பாவியாய் நான் தர
எதுவும் என்னிடம் இருக்கவில்லை.
சில கவிதைக் கிறுக்கல்களின்
மடிப்பு விளிம்புகளுக்குள்
மறைத்த உன் முகம்
வழியாமல் தவிப்போடு
எனக்கு மட்டுமே தெரியும்படியாய்.
கோடு கிழிக்காவிட்டாலும்
தாண்ட மனமில்லா
அன்பைத் தந்திருந்தாய்
உள்ளங்கை வெப்பத்துள்
நீ...
மிகச் சுதந்திரமாய்
சாகவாசமாய்
சாமான்யமாய்
காத்திருப்பதே சுகமாய்
நானங்கு.
எதார்த்தமும்
நிதர்சனங்களும்
சமூகமும்
முகம்தானென்று
எதிர்கொண்டால்
வாழ்வு எமக்கானதாய்
நம்பிக்கையில்லையெனக்கு.
உன் முகத்தை
விளிம்பிலிருந்து வழிந்தோடவிட
அதிக நேரமில்லையெனக்கு
ஆனால்....
உன் உள்ளங்கை வெப்பம் குறித்த
கவலைதான் அதிகமெனக்கு.
இன்னும்...
இறுக்கிய
உன் கைகளுக்குள்தான்
என் அன்பு.
சிலுவைகளை
கைகளுக்குள்
ஒளித்து வைத்திருப்பதாய்
பதை பதைக்கிறாய்.
விடுத்து விட்டெழும்பு
கையின் ரேகைகள்
உன் பிறப்பின் அளவைகளை
நிர்ணயிப்பதில்லை.
கைகளைத் திற
என் கவிதை விளிம்புகள் சொல்லும்
வெப்பத்தின் அளவை
என் கைகள் புதையுண்ட
அளவையும் கூட!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
5 comments:
அன்பின் 'ஆழம்' புரிகிறது...
அன்பின் ஆழத்தை அழகிய கவிதையில் தந்த தோழிக்கும் என்
இனிய வாழ்த்துக்கள் .
ப்ப்பா....!!
ஆழமான சிந்தனை
சோர்ந்து போகாதே மனமே..
துணிந்து நில் தொடர்ந்து செல்..
வெற்று உள்ளங்கை ரேகையின்
மிச்சம் பார்க்கும் நீ
சற்று நிமிர்ந்து நின் நிற்கும்
நிலை அறிந்துகொள்..
நீண்ட நடைபோடு..
எதிர்படு தடைகளை
தவிடுபொடியாக்கு ..
அப்பப்பா
ஆயிரமாயிரம் பொருள் கோர்வைகள்
கவிதையில்
அருமையான நம்பிக்கை மற்றும் எழுச்சி கவிதை சகோதரி..
அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!
Post a Comment