*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, January 30, 2014

காதல் குறிப்பொன்று...

கனவுகளுக்கு
வால்கட்டிப் பறக்கவிடமுடிகிறது
உன் சில்மிஷங்கள்
தாளாப் பொழுதுகளில்
காதலின் பூரணத்தை உணரும்
இரவின் உயர்ந்த கோபுரமமர்ந்து.

ஆழ்கடலென்றும்
ஆழ்தவம் புரியும் மலரென்றும்
காதல்
அது ஒரு மரணத்தின் வாசலுமாய்.

ஒருவேளை காதலைத் தாண்டி
என் மரணம் முந்திக்கொண்டால்
நாளும்
பொழுதும்
இரவும்
பகலும்
கோபுரமும்
எல்லாமும் மாறாதிருக்கும்.

ஆனால்
உன் காதலும்
சில்மிஷங்களும்
கனவும்
வாலும்
என் சந்தோஷங்களும்
இப்படி
சொல்லப்படாமலே அலைந்திருக்குமோ!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

தனிமரம் said...

காதல் சொல்லாமல் அலைவதிலும் ஒரு சுகம் கவிதாயினி! அருமையான
உள்ளீடு!

தனிமரம் said...

நீண்டநாட்களின் பின் பால்க்கோப்பி எனக்குத்தான்!ஹீ

ஹேமா said...

நேசன் அது ஒரு கனாக்காலம்.உங்களுக்கேதான் முழுப்பால்க்கோப்பியும் இண்டைக்கு.எடுத்துக்கொள்ளுங்கோ !

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் இனிய நினைவுகள் என்றும் சுகமே...

வாழ்த்துக்கள்..,.

சுந்தரா said...

சொல்லாத காதலைச் சொல்லியிருக்கிற கவிதை மிக அழகு ஹேமா!

Post a Comment