*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, January 21, 2014

பிரிக்கப்படா சிக்கல்...

பார்வைகள் சிதைந்த
இயல்பினர் அவர்கள்
இதயம் பருத்த பருந்துகள்
பெயர் ஆண்களாம்.

அவர் பெற்ற
அன்னைபோலன்றி
விஷேசமாக
ஏதுமில்லை என்னிடம்.

பிரமாண்ட மடிப்புக்களில்
நீலநரம்புகள் குறித்த வருத்தம்
எனக்கும்தான் என்றாலும்
திரண்ட மார்பை
சீவிக்குறைக்க முடியவில்லை.

சுவர்க்கோழியென
ஒட்டிக்கிடக்கிறேன்
அடுப்பங்கரையில்
குடத்தோடும்
உட்சுவர் உடைத்த
இடுப்புவலியோடும்.

என் இயலாமையின் உமிழ்தல்
ஒரு இரவுப்பாடகனின்
நிரம்பாப் பாத்திரமென
ஆனாலும்
உனை நிரப்பும்
விலைமாதென
வரையறையிடுகிறாய்.

அந்தநேரத்தில் மட்டும்
எப்படிச் சல்லாபமாய்
கொஞ்சமுடிகிறது
செல்ல வார்த்தைகளோடு
உன்னால்!

http://kaatruveli-ithazh.blogspot.co.uk/2014_01_01_archive.html

ஹேமா(சுவிஸ்)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிக்கல் தான்...

'பரிவை' சே.குமார் said...

சிக்கல் பிரிக்கப்படவில்லைதான்....
படம் அருமை.

Seeni said...

Kodumai..

Anonymous said...

வணக்கம்
சிலந்தி வலைச்சிக்கல்தான்.........காற்று வெளி இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

இயற்கை வகுத்த விதி?!

Post a Comment