*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, December 27, 2013

காதல் துளிகள் (11)

முந்தானை பிடித்திழுக்கும்
குழந்தையாய் தொடர்கிறேன்
தாயுமானவனே......
சுவை காட்டி
வெடுக்கென
இழுத்த இனிப்பானாய்
நீ எனக்கு !

நொடியொன்றில் கொல்லவும்
அதே மறுநொடியில்
உயிர்ப்பிக்கவும்
முடிகிறது உன்னால்

நீ...என்ன
கடவுளை வென்றவனோ
எத்தனை முறைதான்
இறப்பதும் பிறப்பதும் !

தெருவில்...
தொலைக்காட்சியில்...
தெருவில்...
வரும்...
போகும்...
முகங்களோடு
சமப்படுத்தித் தேடுகிறேன்
எவரெவரையோ
ஞாபகப்படுத்துகிறார்கள்
உன்னைத் தவிர....

நாளின் வேகப்புள்ளியில்
உன்னை
நினைக்காத நேரமில்லை
நினைத்தாயா
நீ இன்று என்னை !

நீ.....
எழுதி விட்ட
பாதிக் கவிதையில்
தொடருமென்று
புள்ளிகளிட்டு
முற்றுப்புள்ளி வைக்கா
பெரு விதி
வீதியில் நான் !

எதாகிலும்
ஏதாகிலும்
ஏதாகிலும் சொல்லிவிடு
உயிர்வாழ
நரம்பறுத்த கைகளில்
உன் பெயர் மிஞ்சியிருக்கும்
குருதி சொட்டச் சொட்ட !

ஹேமா (சுவிஸ்)

8 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரி.

Anonymous said...

கிட்டத்தட்ட 2010லிருந்து இதே போன்ற கவிதை அமைப்புகளையே மேலதிகம் இங்கு காண்கிறேன்.
இது புதியவர்களுக்கு மகிழ்வூட்டுவதாக இருப்பினும், பழகியவர்களுக்கு ஆயாசமாக இருக்கக்கூடும் என எண்ணுகிறேன்.
தேடி வாசித்தல், புதிய இடங்கள் போய்ச் சேருதல், புது நண்பர்களைக் கண்டறிதல், எதன்மீதும் பற்றன்றி மூன்றாம்கண் கொண்டு பார்த்தறிதல் இப்படி பல பயிற்சிகள் மூலமே புதிய தரிசனங்களைக் கொண்டறியலாம்.. அதை கொக்கின் அலகு போல மீனுக்கும் சேதாரம் இல்லாமல், குளத்தின் வானமும் கலையாமல் கவ்விச் சேர்ப்பதே கலையின் பாடு. பெரிதினும் பெரிது அரிதினும் அரிதை இனிதினும் இனிதாய் உரிதினும் உரியவர்க்கு (உய்ப்ப) உரைத்தல்..!!

Anonymous said...

வணக்கம்
மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாழ்த்துக்கள் சகோதரி...

Anonymous said...

வாழ்த்துக்கள் சகோதரி...

அம்பாளடியாள் said...

பிறக்கப் போகும் புத்தாண்டில்
எண்ணியது ஈடேற
இதயமது மகிழ்ந்திருக்க
என் இனிய வாழ்த்துக்கள் தோழி ஹேமா ...

ஸ்ரீராம். said...

நல்லாயிருக்கு ஹேமா... எங்கே முகநூல் பக்கம் கூட ஆளைக்காணோம்?

விச்சு said...

அத்தனையும் தேன்துளிகள்..

Post a Comment