*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 08, 2013

கையாலாகாத்தனம்...


சுழற்சிக்காய் குறி சொல்லி
அதிஷ்டமென
நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது
நாட்காட்டி.

கவிழ்த்து வைத்த
கரப்பை
பூனை தட்டிவிட
குஞ்சுகள் கௌவும்
பருந்தெனக் காலம்
கை மாற
கழுத்தில் கட்டியாய்
அசிங்கப்படுத்தும் கழலையென
நாளொன்று வீங்கி வலித்து....

நாளொன்று
அதிஷ்டமானால்
ஆறு நாட்களும்
சங்கடத்தில் தடுமாறி
காலை தவறவிடும்
புகையிரதம் முதல்
இரவு விளக்கின் குமிழ்
பழுதாகியதுவரை.

மகர ராசிக்கு
முகராசியென
ராசிப்பலன் நம்பி
கருத்த நாளொன்றுக்குள் புகுந்து
முழித்த முகம்
யாரென்று யோசித்தால்
அப்பா அம்மா சமேதராய்
ஆனைமுகப் பிள்ளையார்
முருகன் ஆறுமுகன்.

ஒரு நாள்போல இல்லை
பல நாட்கள்
விடியாத நாட்களுக்குள் போராடி
விடிந்ததாய் நம்பித்தானே
பதுங்கு குழிகளை மூடினோம்.

விடியாத நம் நேரம்
வேளையா விதியா
காரணங்கள் காரியங்கள் எங்கோ
விடியா மூஞ்சியென்ற
காரணப்பெயர் எங்கோ.

வெள்ளியிலும்
மாதவிடாய் விலக்கிலும்
அழகாய் விடியும் சிலசமயம்!!!

ஹேமா(சுவிஸ்)

9 comments:

Yaathoramani.blogspot.com said...

விடியாத நம் நேரம்
வேளையா விதியா
காரணங்கள் காரியங்கள் எங்கோ
விடியா மூஞ்சியென்ற
காரணப்பெயர் எங்கோ.//

மிக மிக அருமை
வார்த்தைக் கரைகளை மீறும்
உணர்ச்சிப் பிரவாகம்
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

கவியாழி said...

விடியாத நாட்களுக்குள் போராடி
விடிந்ததாய் நம்பித்தானே//நம்பிக்கை

திண்டுக்கல் தனபாலன் said...

நேரம் காலம் வகுக்க முடியுமா என்னா...?

ஸ்ரீராம். said...

விதியென்றொன்றிருந்தால் நாளென் செயும், நரரென் செய்வர்......! அந்தந்த நாளையும், நேரத்தையும் பொறுத்தது!!!

Anonymous said...

நேரம் பொன்னானது...

தனிமரம் said...

விடியாத நம்பிக்கைகளோடு வீதிவழியில்! வெளியிலும் விடியல் தேடி! கவிதை அருமை கவிதாயினி!

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல கவிதை அருமை கவிதயரசி அவர்களே...!

Seeni said...

mmm...

unmaithaan...

Post a Comment