*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, June 04, 2013

அழகுத் தேடல்...


கதவைத் திற
காற்றால் நிரப்பிக்கொள்
உண்மைகள் நிரம்பிய
நிர்வாணமாய்
மனதை திறந்து வை
ஈரம் கசிய
வறட்சி குறையும்.

ஏதேன் தோட்டத்துக் கனி
உண்ணும்வரை
ஆதாமும் அழகு
ஏவாளும் அழகு
உண்மை நிர்வாணத்தில்
அழகாய்.....
மிக அழகாய்.

போர்த்திப் பூசிய
ஆடைகளைக் களைந்தெறி
சாத்தான் தந்த
அத்தி இலையது.

அந்நியமாய் இல்லாத
உன் நிர்வாணம் அழகு
உனக்குள் உணர்வு
உனக்குள் உண்மை
உனக்குள் தேடல்
உனக்குள் ஒளி
உனக்குள்தான் எல்லாமே
உன்னைத் தவிர
உனக்குள் எதுவுமில்லை
அது அசிங்கமுமில்லை.

நிர்வாணமா
சீ...
என்ன இது அசிங்கமாய்
என்பதும் கேட்கிறது
ஆனாலும்
தோழனே
நிர்வாணமே நிஜம்
பேரழகு
நிர்வாணத்தில் நீ !!!

ஹேமா(சுவிஸ்)

9 comments:

கவியாழி said...

நீங்கள் சொல்வதும் உண்மைதான்

திண்டுக்கல் தனபாலன் said...

உணரும் பார்வையில் (மனதில்) உள்ளது எல்லாமே...!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

மாலதி said...

ம் உண்மைதான் எத்தனை சிறப்பான வரிகள் நிர்வாணம் ( வெட்டவெளி ) இந்த உலகம் தானே சிறப்பு பாராட்டுகள்....

கும்மாச்சி said...

நல்ல கவிதை, உண்மை.

வெற்றிவேல் said...

எத்தனை சிறப்பான கவிதை...

அழகு ஹேமா...

தனிமரம் said...

கேள்விகள் கேட்கும் கவிதை!ம்ம்

சிந்தையின் சிதறல்கள் said...

பலவரிகளை சொல்லத்தோன்றுகிறது சொல்லாமல் ஏதோ தடுக்கிறது கவிதையை ரசித்தேன் சொல்லவந்த விடயம் ஏனோ புரியவில்லை

ananthu said...

"நிர்வாணமே நிஜம்" ரசித்த வரிகள் ...

Post a Comment