உனக்கும் எனக்குமான
இந்தப் பெரும் காட்டில்
இல்லாதிருக்கிறது
என் சந்ததிக்கான இடம்.
பாறைகளில் மோதி வீழும்
பறவையல்ல நான்
வல்லமையற்ற மனதோடு
திசைகளை
மாறிக் கீறிக்கொள்ள
முட்டாள்களின்
வழித்தோன்றலும் அல்ல.
புகைப்படங்களிலும்
பொருட்காட்சிச்சாலையிலும்
தொங்கும் காட்சிப்பொருளல்ல
எங்கள் அவல வாழ்வு.
முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....
இது எனக்கான காடு
இளங்கன்றுகள் பயமறியாது
எச்சரிக்கிறேன்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
10 comments:
எச்சரிப்புக்கள் கூட எம்நிலையை எழுத்தில் அறிவிக்கட்டும்.சிந்திக்கத்தூண்டும் கவிதை.
azhaku..
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....
வாழ்த்துக்குள் தொடங்குங்கள்
அந்த நம்பிக்கையுடன் மன உறுதி வேண்டும்...
வாழ்த்துக்கள்...
Nice.,
அருமை.
முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....
தமிழனின் வரலாறு முறையாகத் தொகுக்கப் படவில்லை! நம் முன்னவர் செய்த தவறை பின்னவராவது சரிசெய்யட்டும் உங்கள் ஆதங்கம் சரியே! நலமா?
இது எனக்கான காடு...
கலக்கல் கவிதை...
அருமையான கவிதை! நன்றி!
முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....
நம் வரலாறும் நம் பெருமையும் நாம் அறியாமல் இருப்பது பிழை தான்...
Post a Comment