கடக்காது கரை
ஆர்கலி (கடல்)
மீள்கூடும் கூழாங்கல்.
சிதைந்துலர்ந்த வர்க்கபேதம்
உருமேறு தெருநாயின்
நச்சுப்பல் புண் புணர்வு
இரவுக்குறியோசை.
கல்லும் உதவும் ஒருக்கால்
எள்ளின் புல்லும்
சூடாற்ற புவிபரவ
மனிதம்
மதியாக் காளான்
கோட்டமாய்
மண்சாடிக் காலிறங்கும்.
குருதி குடித்த சாத்தானின்
சூன்யச் சீரழிவு
கடைவாய் வழி
நாகரீக அலங்காரமென
நிர்வாண காதம்
பேச்சு உடை.
கொட்டாவி ஊழியன்
தட்டும் தகரம்
ஊர்வெளியில்
நிர்மாலியச் சடங்காய்
நிருத்தம்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
2 comments:
.. கொட்டாவி ஊழியன்
தட்டும் தகரம்
ஊர்வெளியில்
நிர்மாலியச் சடங்காய்
நிருத்தம்!!! ...
உண்மைதான் ஹோமா...
தமிழ் மனம், இன்ட்லி, தமிழ்10 ஓட்டு போட்டுட்டேன், அழகான கவிதை. வழக்கம் போல எனக்குதான் புரியல....
Post a Comment