எதையும்
தெரிந்து வைத்திருக்கவில்லை.
பூக்களைத் தெரிகிறது
பெயர் சொன்னால்
புரியவில்லை.
கையிலிருப்பது
ஆயுதமெனத் தெரிகிறது
பெயர் தெரியவில்லை.
ஸ்வரங்கள் தெரிகிறது
வாசிக்கும் ராகம்
தெரியவில்லை.
தெரியவில்லைகள் பல...
கும்மிருட்டிலும்
என் தெரியவில்லைகளை
ரசித்தவன்
நிரப்பிக்கொண்டிருக்கிறான்
முன்னர் ஒருபோதும்
நானறியா ஸ்வரங்களால்
தெரியாதவைகளை!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
6 comments:
நல்லதொரு கவிதை
ஸ்வரங்கள் இணையும்போது தான்
சங்கீதமாகிறது. ஸ்வாரசியம் பிறக்கிறது.
ராகங்களைக் கண்டுபிடிக்கலாம்.
ரசிகனின் உள்ளத்தை காண இய்லுமோ ?
அந்த உள்ளம் இருக்கிறதே !
அது அட்லான்டிக் கடல்.
அமைதியும் இருக்கும். ஆரவாரமும் இருக்கும்.
அழகின் நடுவினிலே
அன்பு ஒன்று நடனமாடும்.
சுப்பு தாத்தா.
ந்யூ யார்க் லிருந்து.
இங்கே வாருங்கள்.
http://subbuthatha.blogspot.in
அருமை.
mmmm...
piramaatham...
அருமை... வாழ்த்துக்கள்...
ஸ்வரங்கள் புரியாவிட்டாலும் இசைக்கப்படும் கீதங்கள் ரசிக்கலாம் !
Post a Comment