சுருண்டு படுத்திருக்கும் பூனைக்குட்டியென
இன்று வெறும் நாளாயிருக்கிறது
எந்தப் பாத்திரத்துக்குள்ளும் அடங்குவதாயில்லை.
படுத்திருக்கும் சருகென
கொஞ்சம் படபடத்து தெருக்கள் விடிந்தாலும்
என் நாள் வெறுமையாய் இதுவரை படுத்திருந்தது.
பள்ளிப்பிள்ளைகள் நியாயமற்ற பத்திரிகைகளை
வீசிப்போனார்கள் என் வாசலில்.
எதிர்ச் சுவரில் காதலுக்கான வியாபார விளம்பரம்.
இப்போது மதியம்.....
சூரியன் என் கண்களுக்கு
எப்போதும் மறைந்தபடிதான்
வெறும் நாளிலாவது
எனக்காகச் சிரித்திருக்கலாம் ஒரு கையசைப்போடு.
பூங்காவில் விளையாடும் குழந்தை
ஒளித்துவிளையாடிப் பின் பிடிபட்டபோது
இந்த வெறும் நாள் ஒரு கூடல்காட்டின்
பயங்கரத்தைக் கடப்பதாய் உணர்கிறேன்.
ஒன்றேயொன்று.....
ஒரு மென்மையான வெள்ளைப்பூவை
என் வாசலில் வைத்து வணக்கமும் எழுதிப்போயிருக்கிறது
யாரொருவரும் கையளிக்காத ஆதுரத்தில் நனைத்தெடுத்து
இன்றைய வெறும் நாள்!!!
ஆதுரம் - பரபரப்பு
ஹேமா(சுவிஸ்)

Tweet | ||||
5 comments:
ekkam.....!
Superb friend!
அருமை ஹேமா. ஆதுரம் என்றால் பரிவு இல்லையோ?
ஆதுரம்...= அவா,பேராசை,நோய்,வியாதி,பரபரப்பு
அருமையான சொல்லொன்று படித்துக்கொண்டேன் உங்களிடமிருந்து...
Post a Comment