*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, May 07, 2013

நட் 'பூ'...


கையில் கிடைத்திருக்கிறது
அன்பின்
திறந்த புத்தமொன்று
சில இனிப்பான
பக்கங்களோடு.

கரைந்து படிந்த
இனிப்பை இன்னும்
மொய்த்துக்கொண்டிருக்கிறது
நினைவெறும்புகள்.

இன்னும் பல
இனிப்புக்களை
தருவதாகச் சொல்லி
நானில்லாத நேரத்தில்
என் தலையணையின் கீழ்
சில இனிப்பின் துகள்களைப்
போட்டும்விட்டிருக்கிறது.

காலையிலும்
வாசனை சுமந்த
எறும்புகளின்
மென்மீசை
நாசியோடு
ஊர்ந்து உரசுகிறதென்
மனதை.

அன்பின் புன்னகையை
நானும் சேமித்துக்கொள்கிறேன்
அந்த எறும்புகளைப்போலவே!!!

ஹேமா(சுவிஸ்)

14 comments:

Seeni said...

arumai..!

கவியாழி கண்ணதாசன் said...

மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

நட்பூவின்
தேனமுது
திகட்டாமல் இனிக்கிறது
கவி வரிகளில் சகோதரி...

Chellappa Yagyaswamy said...

நல்ல அழகான சுவையான...கவிதை!

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க சிரிக்க : அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Students-Ability-Part-8.html

இரவின் புன்னகை said...

அழகான கவிதை ஹேமா... எறும்பைப் போல் நாமும் சேமிக்க வேண்டியது அன்பை மட்டுமே!!!

s suresh said...

அருமையான வர்ணிப்பு! அழகான கவிதை! நன்றி!

தனிமரம் said...

எறும்புகள் போல நட்பும் சுறுசுறுப்பைக் கற்றுத்தரும் !கவிதை அருமை.s

மாதேவி said...

அழகான கவி.
கவியுடன் படமும் அழகு சேர்கின்றது.

kaliya raj said...

ஹேமா.. சுகமா...நட்பில் அன்பு சுகம்.

Jayajothy Jayajothy said...

புத்தகத்தின் சில இனிய பக்கங்களை நோக்கி ஊர்ந்து வரும் எறும்பாய் நானும் உங்கள் கவிதையோடு.........

கீத மஞ்சரி said...

நினைவெறும்புகளுக்கு என்றென்றும் திகட்டத் திகட்ட அன்பின் இனிமை தொடர்ந்து கிடைத்திருக்க வாழ்த்துகிறேன் ஹேமா. கவிதைக்குள் ஈர்த்து வெளிவர இயலாதபடி இடுங்கிப்பிடிக்கும் வரிகளுக்குப் பாராட்டுகள்.

நிலாமகள் said...

நினைவெறும்புகள்....

அழகு!

Post a Comment