நெருப்பு நெருப்பை அணைக்காது.யாழ்/நூலகம் இது எம் சொத்து.மனதில் அணையா நெருப்பு.ஒருவேளை வரும் தலைமுறை துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்தாலும் அது எமக்குக் கற்பித்த பாடத்தையும் இழப்பையும் மறக்காது !
பொது நூலகம் ஜுன் 1ம் திகதி 1981 திங்கட்கிழமை இரவே எரிக்கப்பட்டது. மே 31ல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றபொழுது இரவு 8.15 மணியளவில் இனம் தெரியாதவர்கள் பொலிசாருக்கு துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து கலவரங்கள் மூண்டன. நாச்சிமார் கோவில் கோபுரம் அதனருகிலிருந்த வீடுகள் வீதியால் சென்ற வாகனங்கள் போன்றவை அடித்து நொருக்கப்பட்டதுடன் தீவைத்தும் கொழுத்தப்பட்டது. அடுத்த நாளே பொது நூலகம் எரியூட்டப்பட்டது. விபரமாக எனது கிருத்தியம் வலைப்பதிவில் பழைய செய்திகளில் காணலாம். நாளை இரவே நான் எனது பதிவில் இதுபற்றித் தெரிவிப்பேன்.
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
6 comments:
பொது நூலகம் ஜுன் 1ம் திகதி 1981 திங்கட்கிழமை இரவே எரிக்கப்பட்டது. மே 31ல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றபொழுது இரவு 8.15 மணியளவில் இனம் தெரியாதவர்கள் பொலிசாருக்கு துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து கலவரங்கள் மூண்டன. நாச்சிமார் கோவில் கோபுரம் அதனருகிலிருந்த வீடுகள் வீதியால் சென்ற வாகனங்கள் போன்றவை அடித்து நொருக்கப்பட்டதுடன் தீவைத்தும் கொழுத்தப்பட்டது. அடுத்த நாளே பொது நூலகம் எரியூட்டப்பட்டது. விபரமாக எனது கிருத்தியம் வலைப்பதிவில் பழைய செய்திகளில் காணலாம். நாளை இரவே நான் எனது பதிவில் இதுபற்றித் தெரிவிப்பேன்.
ஒரு மகத்தான நூலகத்தை எரிப்பது என்பது தன் குழந்தையை தானே எரிப்பது போல...
ஒ அவனுகளுக்குதான் ஒரு "........" கிடையாதே.
கல்விக்கும் இலக்கியத்துக்கும் சாவுமணியடித்த தினம் :(
ஒரு இலக்கியச் சுரங்கம் கயவர்களால் கருக்கப்பட்ட நாள்.சிங்கள இனவாதத்தின் கொடூரத்தை இன்றும் இயம்புகின்றது இந்தச் சம்பவம் :'(
எத்தனையெதத்னை புத்தகக் குழந்தைகள்! நினைக்க மனம் ஆறுறதில்லை...! மறக்க முடியாத துன்பியல் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று!
வரலாற்றின் பொக்கிசம் பல வாழ்ந்த வீட்டில் அவர்கள் அரசியலுக்காய் இட்ட தீ இன்னும் பலர் நினைவில் வாழும் தீ !
Post a Comment