*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 26, 2013

சபிக்கப்பட்ட இரவு...


பொழுதுகளை
மௌனிக்க வைக்கிறது
என் வீட்டு மெழுகுதிரி
மெல்ல வெளியில் பார்வை பரவ
பகலின் வெளிச்சத்தை
மௌனிக்க வைத்த
இரவைச் சபித்தபடி
தெருவைக் கடக்கிறது
ஒரு காட்டணில்.
தன் மகவை
வயிற்றின் மேல் கட்டியபடி
சாலையில் ஒரு தகப்பன்.
மெல்லிய காற்றையே தாங்காமல்
கொம்பிழக்கும் ஒரு இலை.
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
ஏதோ ஒரு அவலம் ஆபத்து.
என் அறையில்
இசைக்கிறது மொழியற்ற ஒரு பாடல்.
தனியாக எரியும் மெழுகுதிரிக்கு
நான் துணையென்று நினைக்க
தலையாட்டி
தான் எனக்குத் துணையென்கிறது.
உன் நினைவை மட்டும்
சொல்லாமல் ஒளிக்கிறேன்
மெழுகின் ஒளியும் மெல்லிய இசையும்
மனதை நிறைத்தாலும்
நிறையவில்லை இன்றைய நாளும்
நீயில்லாமல்....!!!

ஹேமா(சுவிஸ்)

6 comments:

Seeni said...

arumai...!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாக அருமையாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

ஹேமா உங்கள் பக்கம் வராமலே நாட்களும் கழிந்து விட்டது.கவிதை அருமை.

Unknown said...

நிறையவில்லை இன்றைய நாளும்
நீயில்லாமல்....!!!

????????????????????? ! ! !

Unknown said...

மனதைத் தொட்டது! இல்லை! சுட்டது!

தீபிகா(Theepika) said...

உருகிக் கொண்டே இருக்கின்றது.
மெழுகும்.
மனதும்.

Post a Comment