*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, November 18, 2012

தூபம்...

நான் தெரியாதுபோல
நடிப்பதைக்
கண்டுபிடித்துவிடுவாயோ 
ம்ம்ம்...
உன் ஆலாபனையை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
மகிழ்ச்சியில் நீ.

நீயோ...
விடுகதைகள்போல
பலவற்றைச்
சொல்லிச் சொல்லி 
விடுவிக்கிறாய்
அந்த நேரத்தின்
உன் முகபாவமே
அலாதிதான்
சொல்லத் தெரியவில்லை.

இல்லை இல்லை...
அதுவும் இதுவும் 
ஒன்றில்லையென்று 
சொல்ல நினைத்தும்
ஆகாதது பற்றிச்
சொல்லி ஆகாதென்று 
பேசாமலிருக்கிறேன்.

நீயோ...
உறுதியாக்கிக்கொள்ள
படாத பாடு படுகிறாய்
உன் அவஸ்தையும்
ரசனையாகவே இருக்கிறது.

இடைக்கிடை 
தவறு...தப்பு
எனச் சொல்ல 
விழைகிறேன்
விடுவதாயில்லை 
உன் அவசரம்.

நான்...
நீ...
இருள்...
சம்பந்தப்பட்டது என்றாலும்
இயல்புதான் என்கிறாய்
அலாதியான
உன் இயல்போடு.

சொல்லிக்...கொ...ண்...டே
கேட்டுக் கேள்வியில்லாமலே
அந்தி நட்சத்திர இருளில்
என் உணர்வுகளைத்
தின்னத் தொடங்குகிறாய்
சிவப்பு நிற மதுவின்
உதவியோடு
மிகமிகக் கவனமாக!!!

ஹேமா(சுவிஸ்)

25 comments:

சசிகலா said...


உன் அவஸ்தையும்
ரசனையாகவே இருக்கிறது.

ரசிக்கவே செய்கிறது அழகு சகோ.

Seeni said...

unarvai!

urukki vitteeka ....

vaarthaiyil.....

Ashok D said...

காலையில் வாசலில் இங்கே பெண்கள் நீர் தெளிப்பார்கள், நம்மேல் பட்டுவிடுமே என்று சற்று தள்ளி நடந்தாலும் நம் மேல் படாமல் அவர்களின் தெரிப்பு இருக்கும் லாவகமாய்.. அப்படிதான் எழுதி செல்கிறீர்கள்... :)

ஆழ்மனத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் புறவாழ்க்கையாக நமக்கு அமைகிறது... முடியும் என்றால் அதுவே, முடியாது என்றால் அதுவே... so always care on ur 'FEELINGS' ஏனெனில் அவை தான் உங்கள் வாழ்கையை தீர்மானிக்கன்றன :)

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

பிலஹரி:) ) அதிரா said...

ஆஹா.. ரசனை நன்றாக இருக்கு.

நீங்கள் எப்படிச் சொன்னாலும் விடுவதாயில்லைப்போல:).

ஸ்ரீராம். said...

நானும் ரசித்தேன்!

Tamilthotil said...

வித்தியாசமான அனுபவம். மனதை வருடி செல்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.

தனிமரம் said...

தூபத்தின் வாசனை இன்னும் யாசிக்க வைக்கின்றது!

Angel said...

நானும் நிறையவே ரசித்தேன் கவிதை வரிகளுக்கேற்ற தூரிகை பெண் !!!!

முல்லை அமுதன் said...

vaazhthukkaL

சாந்தி மாரியப்பன் said...

ரசிச்சு வாசிச்சேன்.

MANO நாஞ்சில் மனோ said...

நீயோ...
விடுகதைகள்போல
பலவற்றைச்
சொல்லிச் சொல்லி 
விடுவிக்கிறாய்
அந்த நேரத்தின்
உன் முகபாவமே
அலாதிதான்
சொல்லத் தெரியவில்லை.

மகேந்திரன் said...

அப்பப்பா...
என்ன ஒரு வார்த்தைக் கோர்வை...

சிக்குண்ட சிறகுகள்
பறப்பதை மறந்து
இருக்கும்போதே இறப்பு நிலையை
இயல்பாய் கொடுத்ததோ
உன் அன்பின் கனிவில்
உயிரின் நிலை மறந்த நான்
இறப்பு நிலை என்றழைத்தது
தவறோ??
இல்லையில்லை
தவறில்லை...
என்னுயிரின் நிலைப்பை
கொஞ்சம் கொஞ்சமாய்
களவாடி விட்டாயே
இதுவும்
இறப்பு நிலையே!!

Anonymous said...

//நான்..
நீ..
இருள்..
சம்பந்தப்பட்டது//
சான்ஸே இல்லை. எப்படி இவ்வளவு கிக்கா எழுதறீங்க? :)

கவிதையை போலவே படத்தையும் ரசித்தேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கற்பனையும் வார்த்தைப் பிரயோகமும் வித்தியாசமாய் உள்ளது.அருமை.

அருணா செல்வம் said...

வலிகளைத் தாங்கிக் கொண்டு அல்லது
வலிக்காதது போல் நடித்துக்கொண்டு தான்
சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது....

இனிய தோழி ஹேமா... நன்று.

மாதேவி said...

"ஆலாபனையை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்"

நாங்களும் கவிதையை ரசித்தோம் ஹேமா.

வெற்றிவேல் said...

உன் அவஸ்தையும்
ரசனையாகவே இருக்கிறது....

எல்லாருமே இப்படிதானே, தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறீர்கள்... தெரிந்ததை காட்டிக் கொண்டால்தான் என்ன!!!

எங்களின் அவஸ்தையை ரசிப்பதில் எப்போதுமே உங்களுக்கு அலாதி பிரியம்... நடக்கட்டும்...

கவிச்சக்கரவர்த்தினி ஹேமாவின் கவிதை வழமை போல் சிறப்பு...

வெற்றிவேல் said...

உயிரோசையில் தங்கள் படைப்பு வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்...

குட்டன்ஜி said...

வார்த்தைகள் உங்களிடம் வசப்பட்டு நிற்கின்றன.

விச்சு said...

//நீயோ...
உறுதியாக்கிக்கொள்ள
படாத பாடு படுகிறாய்
உன் அவஸ்தையும்
ரசனையாகவே இருக்கிறது....//
என்ன ஒரு வில்லத்தனம்!!!! வில்லி ஹேமா...

Muruganandan M.K. said...

பொய்களையும் பாசாங்குகளையும்
பேசாமல் பொறுத்து முழுங்குவதில்
வேஷமிடாத கவிதைகள் பிறக்கிறதே.
அருமை.

சிகரம் பாரதி said...

Aahaa... Arumai.. Arumai... Idhaith thavira solla varththaigal edhum ilai ennidam...

மோகன்ஜி said...

ஹேமா! அழகான நடையில் ஓசிந்து செல்லும் கவிதை...

Post a Comment